

கோவை: கன்னியாகுமரி-அசாம் இடையே கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “அசாம் மாநிலம் திப்ருகார்-கன்னியாகுமரி இடையிலான வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் (எண்:05906), திப்ருகாரிலிருந்து வரும் 8,15-ம் தேதிகளில் இரவு 7.25 மணிக்கு புறப்பட்டு, 11,18-ம் தேதிகளில் இரவு 10 மணிக்கு கன்னியாகுமரி வந்தடையும்.
இதேபோல, கன்னியாகுமரி-திப்ருகார் இடையிலான வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் (எண்:05905), கன்னியாகுமரியிலிருந்து வரும் 6,13,20-ம் தேதிகளில் மாலை 5.20 மணிக்கு புறப்பட்டு, 9,16,23-ம் தேதிகளில் இரவு 8.50 மணிக்கு திப்ருகார் சென்றடையும்.
செல்லும் வழியில் இந்த ரயில்கள் நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம், செங்கனூர், கோட்டயம், எர்ணாகுளம் நகரம், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, ரேணிகுண்டா, நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா உள்ளிட்ட ரயில்நிலையங்களில் நின்று செல்லும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.