Published : 03 Nov 2022 04:35 AM
Last Updated : 03 Nov 2022 04:35 AM

வடகிழக்கு பருவமழை | விழுப்புரத்தில் தயார் நிலையில் 13 நிவாரண முகாம்கள் தயார்

விழுப்புரம் நகரில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணியை ஆட்சியர் மோகன் ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம்: வடகிழக்கு பருவமழையை யொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் 13 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட திரு.வி.க தெரு, சிலப்பதிகார தெரு, மருதூர், அனிச்சம்பாளையம், தளவானூர் ஆகிய இடங்களை நேற்று ஆட்சியர் மோகன் பார்வையிட்டார். மழைநீர் வடிகால்வாய் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது அவர் கூறியது:

மாவட்டம் முழுவதும் 1,177 கட்டிடங்கள் நிவாரண முகாம்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதனை தவிர்த்து கடலோர பகுதிகளில், மரக்காணம் வட்டத்தில் 10 நிவாரண முகாம்கள், வானூர் வட்டத்தில் 3 நிவாரண முகாம்கள் என 10,000 நபர்கள் தங்க வைத்திடும் வகையில் 13 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

வடகிழக்கு பருவமழையை கண்காணித்திட அனைத்து வட்டங்களுக்கும், துணை ஆட்சியர் நிலையில் கண்காணிப்பு அலுவலர்களும் , 53 குழுக்களும், நியமிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மழைநீர் தேங்ககூடிய பகுதிகளாகவும், தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்ட இடங்களில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட 4,500 முதல்நிலை பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தளவானூர் அணைக்கட்டு சீரமைக்கும் பணி ஆய்வு செய்யப்பட்டது. மணல் மூட்டைகள், சவுக்குகட்டைகள் மற்றும் கருங்கற்கள்தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பேரிடர் காலங்களில் அவசரகால தேவைக்கு பயன்படுத்தும் விதமாக 3,000 உபகரணங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கூடாது. குழந்தைகளை ஆற்று பகுதிகளுக்கு செல்லவிடாமல் பெற்றோர் கவனத்துடன் பார்த்து கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழையால் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்காக அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்றார்.

இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சிவசேனா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஷோபனா, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன், விழுப்புரம் நகராட்சி ஆணையாளர் சுரேந்தர ஷா, விழுப்புரம் வட்டாட்சியர் ஆனந்தகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். குழந்தைகளை ஆற்று பகுதிகளுக்கு செல்லவிடாமல் கவனத்துடன் பார்த்து கொள்ள வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x