Published : 06 Nov 2016 09:21 AM
Last Updated : 06 Nov 2016 09:21 AM

இறுதி வேட்பாளர் பட்டியல் 3 தொகுதிகளுக்கும் வெளியீடு: அரவக்குறிச்சியில் 39 பேர் போட்டி

அரவக்குறிச்சி, தஞ்சை, திருப் பரங்குன்றம் தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப் பட்டது. 3 தொகுதிகளிலும் 2 பெண்கள் உட்பட 81 பேர் போட்டியிடுகின்றனர்.

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 26-ம் தேதி தொடங்கி நவம்பர் 2-ம் தேதி வரை நடைபெற்றது. 3 தொகுதிகளிலும் 139 பேர் மனுத் தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 48 பேரின் மனுக்கள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டன.

மனுக்களை வாபஸ் பெற நேற்று கடைசி நாளாகும். அரவக் குறிச்சியில் 7 பேர், திருப்பரங் குன்றத்தில் 2 பேர், தஞ்சாவூரில் ஒருவர் என மொத்தம் 10 பேர் நேற்று மனுக்களை வாபஸ் பெற்றனர். இதையடுத்து 3 தொகுதிகளிலும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி, அரவக்குறிச்சியில் 39, தஞ்சையில் 14, திருப்பரங் குன்றத்தில் 28 என மொத்தம் 81 பேர் களத்தில் உள்ளனர். இவர் களில் 2 பெண்களும் அடங்குவர். தஞ்சாவூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.ரெங்கசாமி, திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி உட்பட 14 பேர் போட்டியிடுகின்றனர். அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி, திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி உட்பட 39 பேரும் திருப்பரங்குன்றத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ், திமுக வேட்பாளர் ப.சரவணன் உட்பட 28 பேரும் போட்டியிடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x