ஒருசிலர் செய்யும் தவறுக்காக அனைத்து ஊழியர்களையும் குறைகூறுவதை ஊடகங்கள் கைவிட வேண்டும்: அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு வேண்டுகோள்

ஒருசிலர் செய்யும் தவறுக்காக அனைத்து ஊழியர்களையும் குறைகூறுவதை ஊடகங்கள் கைவிட வேண்டும்: அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு வேண்டுகோள்
Updated on
1 min read

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் விவகாரத்தில் ஒரு சில வங்கி ஊழியர்கள் செய்யும் தவறுகளுக்காக அனைத்து ஊழியர்களையும் பொத்தாம் பொதுவாக விமர்சிப்பதை ஊடகங்கள் கைவிட வேண்டும் என்று அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் தலைவர் தே.தாமஸ் பிராங்கோ ராஜேந்திர தேவ் மற்றும் செயலாளர் ஆர்.சேகரன் ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்த பிறகு வங்கித் துறையில் வேலைப்பளு அதிகரித்துள்ளது. இதுவரை 5 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிகளில் டெபாசிட் பெறப்பட்டுள்ளது. மேலும், 2 கோடி மக்களுக்கு பழைய ரூபாய் நோட்டு கள் மாற்றி கொடுக்கப்பட்டுள்ளன. வங்கி ஊழியர்கள் பொது மக்களுக்கு ஆற்றி வரும் சேவையைக் கண்டு அனைத்துத் தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சில நேர்மையற்ற மனிதர்கள் சில ஏமாற்று பேர் வழிகளுடன் கைகோர்த்துக் கொண்டு கறுப்புப் பணத்தை மாற்றுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொதுவாக ரிசர்வ் வங்கியில் இருந்து வங்கிகளுக்கு அனுப்பப் படும் ரூபாய் நோட்டுகள் முறை யாக எண்ணப்பட்டு அவை கணக்கில் வரவு வைக்கப்படுகின்றன. பொதுமக்கள் வங்கியில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வரும்போது அவர்களின் பெயர், முகவரி, அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பெறப்பட்ட பிறகே பணம் வழங்கப்படுகிறது. அதேபோல், வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் விவரங்களும் முறையாக கணினியில் பதிவு செய்யப்படுகிறது. நாள்தோறும் வங்கியில் பண இருப்பு சரிபார்க்கப்பட்டு அந்த விவரங்கள் அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்படுகிறது.

வங்கி ஊழியர்கள் நாள் தோறும் 12 முதல் 16 மணி நேரம் பணிபுரிகின்றனர். பொதுமக்கள் அரசு திட்டத்தைப் பற்றி விமர்சித் தாலும் வங்கி ஊழியர்களின் அயராத சேவையை பாராட்டு கின்றனர். இந்நிலையில், ஒரு சில வங்கி ஊழியர்கள் தவறு செய்துள்ளனர். அவர்களை வங்கி நிர்வாகம் பணிநீக்கம் செய்துள் ளது. ஒரு சில ஊழியர்கள் செய்யும் தவறுகளால் அனைத்து ஊழியர் களையும் பொத்தாம் பொதுவாக குறைகூறுவது என்பது அவர்களை காயப்படுத்துவதாக உள்ளது. எனவே அவர்களை விமர்சிப்பதை ஊடகங்கள் கைவிட வேண்டும். இந்த இக்கட்டான தருணத்தில் அனைத்துத் தரப்பினரும் வங்கி ஊழியர்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in