

தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்கத் தின் சார்பாக வரும் 18-ம் தேதி திருப்பூரில் 5-வது உலகத் திரைப்படவிழா தொடங்குகிறது.
இது தொடர்பாக சங்கத் தின் திரை இயக்க ஒருங் கிணைப்பாளர் எஸ்.கருணா 'தி இந்து'விடம் கூறியதாவது:
எங்கள் சங்கத்தின் 5-வது உலகத் திரைப்படவிழா வரும் 18-ம் தேதி திருப்பூரில் உள்ள டைமண்ட் திரையரங்கில் தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சி யில் எழுத்தாளர் ச.தமிழ்ச் செல்வன், எடிட்டர் பீ.லெனின், கவிஞர் நந்த லாலா உள்ளிட் டோர் பங்கேற்கின்றனர். அப்போது நிகழாண்டில் மறைந்த திரை ஆளுமை களான பாடலாசிரியர் நா.முத்துக்குமார், மக்கள் பாடகர் திருவுடையான் உள்ளிட்டோருக்கு நினை வஞ்சலி செலுத்தப்படும்.வரும் 22-ம் தேதி வரை நடைபெறும் இவ் விழாவில் 12 நாடுகளைச் சேர்ந்த 23 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
இதில் திரைத்துறை ஆளுமைகள் ரோஹினி, கமலக் கண்ணன், ரவிக்குமார், சரவணன், ராஜுமுருகன் ஆகியோரும், எழுத்தாளர்கள் பாஸ்கர் சக்தி, ஷோபா சக்தி உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.