

பாலித்தீன் பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியும், நீர் மற்றும் நிலத்தால் சூழப்பட்ட பூமி, தற்போது பாலித்தீன் பைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனை வீடுகளில் பயன்படுத் தாதீர்கள் என்றும் தொடர்ந்து முழக்கமிடுகின்றனர் திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள்.
இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் மூலமாக ஒருங்கிணைந்து சேவை செய்ய துவங்கினோம். இதைப்போல் சமுதாயத்தில் ஒருங்கிணைந்து செயல்பட கல்லூரிப் பேராசியர் ஒருவர்தான் ‘தாகம்’’ என்ற மாண வர் அமைப்பை ஏற்படுத்தினார். பூமியை மாசுபடுத்தாமல் வைக்க சிறு முயற்சியாக கல்லூரியில் ஒன்றிணைந்தோம். 2 ஆண்டு களுக்குள் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் இணைந்துள் ளனர். அனைவரும் பொறியியல் பட்டதாரிகள். முன்னாள் மாணவர் கள் பலரும் இந்த அமைப்பில் தங்களை இணைத்துள்ளனர்.
கிராமப்புறங்களில் வாழும் குழந்தைகளுக்கு கல்வி கற்றுத் தருவது; ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று அவர்களுக்கு உதவுவது உள்ளிட்ட பணிகளை திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி, பெரியாபாளையம், மடையாப்பாளையம், அவிநாசி, முருகம்பாளையம் பகுதிகளில் செய்து வந்துள்ளோம்.
அதேபோல் பாலித்தீன் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். பாலித்தீன் பைகளை கடைகளில் விற்பவர்களை தண்டிக்கமால், உற்பத்தி மையங்களை உறுதியுடன் கண்காணித்தாலே, அவை அறவே குறைந்துவிடும்.
திருப்பூர், வெள்ளியங்காடு குப்பைக் கிடங்கை சுத்தம் செய்ய அனுமதி கேட்டோம். குப்பைக் கிடங்கை மூடுவதற்கான பணிகள் நடப்பதாக கூறினார்கள். இதையடுத்து அப்பகுதியில் உள்ள பாலித்தீன் பைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.