மாயமான குழந்தைகளை கண்டுபிடிக்க ‘சிட்டிசன் பிளாட்பார்ம்’ சார்பில் காவல் ஆணையரிடம் மனு

மாயமான குழந்தைகளை கண்டுபிடிக்க ‘சிட்டிசன் பிளாட்பார்ம்’ சார்பில் காவல் ஆணையரிடம் மனு
Updated on
1 min read

லதா ரஜினிகாந்த், எக்ஸ்னோரா நிர்மல், நடிகர் பார்த்திபன் ஆகியோர் இணைந்து தெருவோர குழந்தைகளின் நலனுக்காக ‘சிட்டிசன் பிளாட்பார்ம்’ என்ற அமைப்பை தொடங்கியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை பாரிமுனை மற்றும் வால்டாக்ஸ் சாலையில் நடைபாதையில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 8 மாத ஆண் குழந்தை ரோகேஷ், 10 மாத குழந்தை சரண்யா ஆகியோர் குழந்தை கடத்தும் கும்பலால் கடத்தப்பட்டனர்.

இந்த 2 குழந்தைகளை கண்டுபிடித்து மீட்கும் பணியில் சிட்டிசன் பிளாட்பார்ம் அமைப்பு ஈடுபட்டது. இதுதொடர்பாக, அப்போதைய காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரனையும் சந்தித்து பேசினர். இந்நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜை சிட்டிசன் பிளாட்பார்ம் அமைப்பின் தலைவர் எக்ஸ்னோரா நிர்மல் நேற்று நேரில் சந்தித்து மனு ஒன்றை வழங்கினார்.

அந்த மனுவில் கூறப் பட்டுள்ளதாவது:

குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய பகுதியில் கடத்தப்பட்ட 2 குழந்தைகளையும் மீட்க வேண்டும். குழந்தைகள் கடத்தலை தடுக்க பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த தயாராக இருக்கிறோம். இதற்கு போலீஸார் உதவி செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in