அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து கபடி வீரர் சேரலாதன் நலம் விசாரிப்பு

அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து கபடி வீரர் சேரலாதன் நலம் விசாரிப்பு
Updated on
1 min read

தமிழக கபடி வீரர் சேரலாதன், அப்போலோ மருத்துவமனைக்கு வந்து முதல்வரின் உடல்நிலை பற்றி விசாரித்தார்.

முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் 22-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை நிபுணர் ஜி.கில்னானி, மயக்க மருத்துவ நிபுணர் அஞ்சன் ட்ரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக் ஆகியோரின் ஆலோ சனையின்படி அப்போலோ மருத் துவமனை மூத்த டாக்டர்கள் குழுவினர் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத் துவமனையில் இருந்து வந்துள்ள ஒரு பெண் பிசியோதெரபி நிபுணர் முதல்வருக்கு பிசியோதெரபி சிகிச்சை தொடர்ந்து அளித்து வரு கிறார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் முதல்வர், சாதாரண வார்டுக்கு மாற்ற இன்னும் நாட்களாகும் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடந்த உலகக் கோப்பை கபடி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற தஞ்சாவூர் மாவட்டம் திச்சினம் பூண்டியைச் சேர்ந்த சேரலாதன் நேற்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வர வேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து சேர லாதன் நேராக அப்போலோ மருத்துவமனைக்கு வந்து டாக்டர் களிடம் முதல்வரின் உடல்நிலைப் பற்றி விசாரித்தார்.

பின்னர் சேரலாதன் செய்தி யாளர்களிடம் கூறுகையில், “உலக கோப்பை கபடியில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் முதல்வரை பார்க்க வந்தேன். நான் பெற்ற பதக்கத்தை முதல்வருக்கு சமர்ப்பிக்கிறேன். விளையாட்டுத்துறைக்கு அவர் அதிக உதவிகளை செய்துள்ளார். அவரது உடல்நலம் பற்றி டாக்டர்களிடம் விசாரித்தேன். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தெரிவித்தனர். அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார்” என்றார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர் தலின்போது அதிமுகவில் சேர்ந்த நடிகை நமீதா நேற்று அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார். அங்கு முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி டாக்டர்களிடம் கேட்டறிந்தார். பிறகு, நமீதா செய்தியாளர்களிடம் கூறுகையில், “முதல்வர் நலமாக இருக்கிறார். அவரது உடல் நிலையில் வேக மான முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரி வித்தனர்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in