

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலி னுக்கு எதிராக முதல்வர் ஜெய லலிதா சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ம் தேதி தமிழக சட்டப்பேரவைக்கு வெளியே வந்து செய்தியாளர்கள் மத்தியில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். அப்போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், உண்மைக்குப் புறம்பான கருத்துகளை வேண்டுமென்றே ஸ்டாலின் வெளியிட்டார் எனக் கூறி, அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன், சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் இதற் கான மனுவை புதன்கிழமை தாக்கல் செய்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.