நாட்டிலேயே முதன்முறையாக நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் ஆன்லைனில் வாக்குப்பதிவு: இரண்டு அடுக்கு பாதுகாப்பை கொண்டது

நாட்டிலேயே முதன்முறையாக நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் ஆன்லைனில் வாக்குப்பதிவு: இரண்டு அடுக்கு பாதுகாப்பை கொண்டது
Updated on
1 min read

நாட்டிலேயே முதன்முறையாக புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதிக்கு நடக்கும் இடைத் தேர்தலில் ஆன்லைனில் தபால் ஓட்டுகளை பதிவு செய்யும் முறை அமலாகிறது.

தேர்தல் பணியில் ஈடுபடுபவர் கள், தபால் மூலம் வாக்களிக்கும் முறை வழக்கத்தில் உள்ளது. தபால் மூலம் வாக்களிக்கும் நடைமுறையில், வாக்குச் சீட்டு களை அவர்களுக்கு அனுப்பி வாக்களிக்கும் முறை கையாளப் பட்டு வருகிறது. இந்த தபால் வாக்குகளால் கால விரயம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

தனி மென்பொருள்

இந்நிலையில் அதற்கு மாற்றாக தற்போது மின்னணு வாக்குப்பதிவு முறை இந்திய தேர்தல் ஆணையத்தின் முழு வழிகாட்டுதலுடன் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஆன்லைன் வாக்குப்பதிவுக்காக மத்திய அரசின் கணினி வளர்ச்சி மேம்பாட்டு நிறுவனம் மூலம் தனி மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் வாக்களிக்க ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பாஸ்வேர்டு (ஓடிபி) பயன் படுத்தப்படும். வாக்காளர்களின் மின்னஞ்சல் முகவரி அல்லது மொபைல் எண்களுக்கு இந்த பாஸ்வேர்டு அனுப்பி வைக்கப் படும். ஆன்லைனில் வாக்களிக்க ஒருங்கிணைந்த அடையாள எண்ணும் வழங்கப்படும்.

சட்ட அமைச்சகம்

இப்படி ஆன்லைனில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு சென்று விடும். இந்த மின்னணு வாக்குப்பதிவு இரண்டடுக்கு பாதுகாப்பு முறையைக் கொண்டது. இதில் தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. மத்திய சட்ட அமைச்சகம் இதற்கான அறிவிப்பை அண்மையில் முறையாக வெளியிட்டுள்ளது.

இந்த முன்னோடித் திட்டம் புதுச்சேரியில் உள்ள நெல்லித்தோப்பு தொகுதிக்கு 19-ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் முதன் முறையாக நடைமுறைக்கு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in