ஓய்வூதியதாரர்களுக்கு மின்னணு வாழ்வு சான்றிதழ்: அரசு இ-சேவை மையங்களில் நேற்று முதல் விநியோகம்

ஓய்வூதியதாரர்களுக்கு மின்னணு வாழ்வு சான்றிதழ்: அரசு இ-சேவை மையங்களில் நேற்று முதல் விநியோகம்
Updated on
1 min read

ஓய்வூதியதாரர்கள் அரசு இ-சேவை மையங்களில் ரூ.10 செலுத்தி மின்னணு வாழ்வு சான்றிதழ் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஓய்வூதிய தாரர்கள், குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை, தாங்கள் உயிருடன் இருப்பது தொடர்பான வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்காத பட்சத்தில் ஓய்வூதி யம் நிறுத்தப்படும். இதற்காக அவர்கள், முன்பு ஓய்வூதிய கணக்கு உள்ள வங்கிகளில் சமர்ப் பித்தால் போதுமானது. ஆனால், சமீபகாலமாக சம்பந்தப்பட்ட ஓய்வூதிய கணக்கு அலுவல ரிடம் நேரில் சென்று ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக தாங்கள் பெறும் ஓய்வூதியத்தில் இருந்து கணிசமான தொகை செலவழிக்க வேண்டியிருந்தது. அவர்களுக்கு அலைச்சலும் இருந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் இ-சேவை மையங்களில் மின்னணு வாழ்வு சான்றிதழ் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண் இயக்குநர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரசு இ-சேவை மையங்களில் தற்போது கூடுதல் சேவையாக, 24-ம் தேதி (நேற்று) முதல் ஓய்வூ தியர்களுக்கு மின்னணு வாழ்வு சான்றிதழ் வழங்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மின்னணு வாழ்வு சான்றிதழ் பெற விரும்பும் ஓய்வூதியர்கள், இ-சேவை மையத் தில் தங்கள் ஆதார் எண்ணை தெரி வித்து, கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். அப் போது அவர்களுக்கு மின்னணு வாழ்வு சான்றிதழ் அச்சிட்டு வழங்கப்படும் என்றார்.

மின்னணு வாழ்வு சான்றிதழ் வழங்கும் முதல் நாளான நேற்று அதிகளவில் முதியவர்கள் வந்து வாழ்வு சான்றிதழ் பெற்றுச் சென் றனர். தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகை தரை தளத்தில் உள்ள இ-சேவை மையத்தில் முதியவர்கள் பலர், வாழ்வு சான்றிதழ் பெற வந்தனர். ஆனால், அம் மையத்தில் சான் றிதழ் வழங்கும் பிரிவில் இருந்த வர்கள் முதியவர்களிடம், ஆதார் அட்டையுடன் ‘பான்’ அட்டை கேட்டதால், சான்றிதழ் வாங்க முடியாமல் திரும்பிச் சென்றனர். ரூ.2 ஆயிரம் முதியோர் உதவித் தொகை வாங்கும் எங்களுக்கு ‘பான்’ அட்டை எதற்கு என புலம்பியபடி அவர்கள் சென்றனர்.

இது தொடர்பாக அரசு கேபிள் டிவி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘இச்சான்றிதழ் வழங்குவதை எளிமைப்படுத்தவே இ-சேவை மையங்களில் மின்னணு சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஆனால், மத்திய அரசு இதற்கான விண்ணப்பத்தில் ஆதார் மற்றும் நிரந்தர கணக்கு (பான்) எண்ணையும் கேட்பதால் அந்த எண்ணையும் அளிக்க வேண்டும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in