

சென்னை: தமிழகத்தில் நவம்பர் 5ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த 29 ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நவம்பர் 5 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின் படி இன்று தமிழகத்தில் மிக கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி தமிழகத்தில் கனமழை தொடரும் என்று இந்திய வானிலை மையம் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.