

கடலூர்: சிதம்பரத்தைச் சேர்ந்த குமார் என்பவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, கொடியம்பாளையம் கடற்கரைக்குச் சென்றார். அங்கு கல் வடிவில் மர்ம பொருள் கிடந்துள்ளது.
அதனை வீட்டிற்கு எடுத்து வந்து வைத்திருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர், அதனை தண்ணீரில் போட்ட போது அது மிதந்துள்ளது. இதனை அவர், சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் தெருவில் உள்ள தனது நண்பரான பொற்கொல்லர் முத்துக்குமரனிடம் கொடுத்துள் ளார்.
அதனை முத்துகுமரன் தனது கடையில் வைத்துள்ளார். இதுகுறித்து விவரம் அறிந்த சிதம்பரம் வனத்துறையினர் நேற்று அந்த கடைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அங்கு இருந்த கல் போன்ற மர்ம பொருளை, எடை பார்த்த போது, அது 1 கிலோ 300 கிராம் இருந்தது. இதுதொடர்பாக, குமாரிடம் கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு அந்தப் பொருளை வனத்துறையினர் எடுத்து சென்றனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், "இது திமிங்கலம் எச்சமாக இருக்கலாம் அல்லது குமுழி வகை கல்லாகக்கூட இருக்கலாம். ஆய்வுக்கு அனுப்பிய பிறகு இது தெரிய வரும்" என்றனர்.