85 கோடி மக்கள் மீது மோடி அரசு போர்: சென்னை ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் கண்டனம்

85 கோடி மக்கள் மீது மோடி அரசு போர்: சென்னை ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் கண்டனம்
Updated on
2 min read

நாட்டில் 85 கோடி மக்கள் மீது மோடி அரசு போர் தொடுத்துள்ளது என்று சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து சில் லறை தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து நவம்பர் 28-ம் தேதி நாடு தழுவிய போராட்டத்துக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் அழைப்பு விடுத் திருந்தன.

அதன்படி, திமுக சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகே உள்ள இந்தியன் வங்கி முன்பு நேற்று காலை 10.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், மாவட்டச் செயலாளர் கள் மா.சுப்பிரமணியன் (சென்னை தெற்கு), ஜெ.அன்பழகன் (சென்னை மேற்கு), பி.கே.சேகர் பாபு (சென்னை கிழக்கு), மாதவரம் எஸ்.சுதர்சனம் (சென்னை வடக்கு), எம்எல்ஏக்கள் ரங்கநாதன், வாகை சந்திரசேகர், வர்த்தகர் அணிச் செயலாளர் காசிமுத்து மாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.

அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

இது திமுக மட்டும் நடத்தும் போராட்டம் அல்ல. மக்களே முன்னின்று நடத்தும் போராட்டம். கடந்த 20 நாட்களாக அனுபவித்து வரும் இன்னல்களால் நவம்பர் 8-ம் தேதியை சுனாமி ஏற்பட்ட நாளாகவே மக்கள் பார்க்கின்றனர். முதலில் 3 நாட்களில் நிலைமை சீராகிவிடும் என மத்திய அமைச்சர்கள் கூறினர். ஆனால், இப்போது 50 நாட்கள் பொறுத்திருக்குமாறு பிரதமர் வேண்டுகோள் விடுக்கிறார்.

சிறு வியாபாரிகள், பூ விற்ப வர்கள், தெருவோர வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள், விவசாயி கள் என பலதரப்பட்ட மக்களும் சொல்ல முடியாத துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். காய்கறிகள், பால், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடிய வில்லை. வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை.

டிசம்பர் 1-ம் தேதிக்குப் பிறகு அரசு, பொது, தனியார் துறை ஊழியர்கள், ஓய்வூதியம் பெறு பவர்கள் என கோடிக்கணக் கானோருக்கு ஊதியம் வழங்க வேண்டியுள்ளது. இவர்களுக்கான ஊதியத்தை வங்கிக் கணக்கில் சேர்த்தால் பணம் எடுக்க வங்கி கள், ஏடிஎம்களில் கூட்டம் அலை மோதும் ஆபத்து உள்ளது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்றார் மோடி. ஆனால், இதுவரை 15 ரூபாய்கூட டெபாசிட் செய்யவில்லை.

இந்தியாவில் சுமார் 85 கோடி பேர் கிராமங்களில் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலான மக் களுக்கு வங்கிக் கணக்கு கிடையாது. அவர்கள் எப்படி ரொக்கமில்லா பரிவர்த்தனை செய்ய முடியும்? மோடி அரசு 85 கோடி மக்கள் மீது போர் தொடுத்துள்ளது. மக்களின் சிரமங்களைப் போக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

பின்னர் ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்ட 1,200 பேர் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். திமுக ஆர்ப் பாட்டத்தால் ராஜாஜி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in