

தமிழகத்தில் இந்தாண்டும் ஜல்லிக் கட்டு நடத்த மத்திய அரசு ஏற்பாடு களை செய்யவில்லை என்றால் திமுக சார்பில் மிகப் பெரிய போராட் டம் நடத்தப்படும் என்று திமுக பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வங்கிகளில் ரூ.1000, ரூ.500 நோட்டுகளை மாற்ற முடியாது என்றும் பெட்ரோல் பங்க்குகளில் ரூ.500 நோட்டுகளை பயன்படுத்த முடியும் என்று மத்திய அரசு கூறி யுள்ளது. ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பிறகு, ஏதோ சலுகைகள் தருவது போல மத்திய அரசு தொடர்ந்து சில அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது.
இதைத்தான் மாநிலங்களவை யில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அரசின் நிர்வாகம் ஒரு பெரிய தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டார். அவர் கூறியது உண்மையாகும். ஆனால், மன்மோகன் சிங் பேசியதற்கு பிரதமர் மோடி பதில் கூறாமல் அலட்சியப்படுத்தியுள்ளதன் மூலம் அவர், நாட்டு மக்களை எந்தள வுக்கு புறக்கணிக்கிறார் என்பது தெளிவாகிறது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10-க்கும் அதிகமான விவசாயிகள் இறந்துள்ளனர். ஆனால், அதிமுக அரசு நிர்வாக ரீதியாக முடங்கி யுள்ளதால் விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்கின்ற னர். அப்படி இறந்த விவசாயிகளின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்வதற்காகவே நான் வெவ்வேறு ஊர்களுக்கு பயணிக்கவுள்ளேன்.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சூழ்நிலையை மத்திய அரசும், மாநில அரசும் உருவாக்கவில்லை என்றால் திமுக தலைவர் கருணாநிதியின் அனுமதி யோடு, திமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.