புனித ஜார்ஜ் கோட்டை பின்புறம் உள்ள ஒருவழிப் பாதை பாதுகாப்புக்காக மூடல்

புனித ஜார்ஜ் கோட்டை பின்புறம் உள்ள ஒருவழிப் பாதை பாதுகாப்புக்காக மூடல்
Updated on
2 min read

கோட்டை ரயில் நிலையம் செல்லும் சாலை சீரமைப்பு

புனித ஜார்ஜ் கோட்டையின் பின் புறம் வெளியேறும் ஒருவழிப் பாதை பாதுகாப்பு காரணங்களுக் காக மூடப்பட்டுள்ளது. மற்றொரு வாயில் பகுதியில் சாலை சீரமைப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது.

தமிழக தலைமைச் செயலகம் புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந் துள்ளது. இந்த கோட்டை வளாகத் தில், தலைமைச் செயலகம், சட்டப் பேரவை கட்டிடம், நாமக்கல் கவி ஞர் மாளிகை தவிர, அரசு அருங் காட்சியகம், தொல்லியல்துறை அலுவலகம் மற்றும் ராணுவ அலு வலகங்களும் அமைந்துள்ளன.

மேலும், கிளைவ் ஹால், புனித மேரி தேவாலயம் போன்றவை அமைந்துள்ளன.

புனித ஜார்ஜ் கோட்டைக்கு 4 பிரதான வாயில்கள் அமைந் துள்ளன. காமராஜர் சாலை பகுதி யில், உள், வெளி வாயில்களும், பின்புறம், கோட்டை ரயில் நிலையம் எதிரிலும், தீவுத்திடல் அருகி்ல் உள்ள சாலையிலும் வாயி்ல்கள் அமைந்துள்ளன.

கடந்தாண்டு அதிகளவில் மழை பெய்த போது, வாயில்களின் அரு கில், கோட்டையைச் சுற்றியுள்ள அகழிகளில் மழைநீர் நிரம்பியது. முன்புற வாயில்களில் எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை. ஆனால், பின்புற வாயில் பகுதி களில் மழைநீர் தேங்கியதால், போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

இதனால், தலைமைச் செய லகத்துக்கு வரும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள், ராணுவ வீரர்கள், ராணுவ கேன்டீனுக்கு வரும் படைவீரர்கள் குடும்பத்தினர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். அவர்களால் கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து சிற்றுந்துகள், முன்புற வாயிலுக்கு இயக்கப்பட்டன.

அதன்பின் மழை நின்றபோது, கோட்டை ரயில் நிலையம் எதிரில் உள்ள சாலை, குண்டும் குழியுமாக மாறியது. இந்தச் சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

வாயில் மூடல்

இந்நிலையில் சமீபத்தில் பாகிஸ்தான் நடத்திய ராணுவ தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவத்தினர் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ என்ற பெயரில் பாகிஸ்தான் நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள ராணுவ அலுவலகங்கள், நிலை களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது. இதன் அடிப்படையில், சென்னை புனித ஜார்ஜ் கோட்டை யின் பின்புறம், ராணுவ அலுவல கங்கள் அமைந்துள்ள பகுதியில் தீவுத் திடல் நோக்கி செல்லும் ஒரு வாயில் மூடப்பட்டுள்ளது. அந்த இடத்தில் தமிழக போலீஸார் மற் றும், ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாலை சீரமைப்பு

ஒருபுறம் சாலை மூடப்பட்ட நிலையில், மக்கள் அதிகளவில் கோட்டை ரயில் நிலையத்துக்கு செல்லும் பாதையை பயன்படுத்து கின்றனர். இதனால், இந்த சாலையை சீரமைக்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘‘மழையின்போது மேலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற் காக தற்போது ராணுவத்தினர் சாலையை சீரமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். சாலையில் கருங்கற்களைக் கொட்டி பள்ளங் களை மூடியுள்ளனர். அடுத்த கட்ட பணிகளை விரைவில் மேற்கொள் கின்றனர். புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில், தொல்லியல் துறை சார்பில் பருவமழைக் காலம் முடிந் ததும் கிளைவ் ஹால் மற்றும் தேவாலயம் பராமரிப்பு பணிகள் தொடங்கும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in