

1,000 மற்றும் 500 ரூபாயை மாற்றிக் கொள்ள போலீஸாருக்கு வங்கி அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த செவ்வாய்கிழமை இரவு அறிவித்தார். இதைத் தொடர்ந்து பழைய நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டு அதற்கு பதிலாக புதிய 2,000 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் பொது மக்கள் நீண்ட வரிசையில் திரண்டிருப்பதால் அவர்களை ஒழுங்குபடுத்தும் பணியை போலீஸார் செய்து வரு கின்றனர். அவர்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டு களை மாற்றுவதற்கு வசதியாக டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை யில் உள்ள போலீஸ் டிஜிபி அலுவலகம் மற்றும் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் வங்கி அதிகாரிகள் நேற்று சிறப்பு முகாம்களை அமைத்திருந்தனர்.
இங்கு போலீஸார் மற்றும் அவர் களின் குடும்பத்தினரிடம் இருந்து பழைய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொண்டு மாற்றாக புதிய ரூபாய் நோட்டுகளை வழங்கினர்.
சிந்தாதிரிப்பேட்டை, புதுப் பேட்டை, எழும்பூர் காவலர் குடி யிருப்பில் வசித்து வந்த போலீ ஸாரின் குடும்பத்தினர் உட்பட பல ரும் இதனால் பயன் அடைந்தனர். சுமார் 30 லட்சம் ரூபாய் மாற்றப் பட்டு புதிய ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டதாக வங்கி அதிகாரி கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.