பெங்களூரு புகழேந்தி
பெங்களூரு புகழேந்தி

இபிஎஸ் அழைத்தால் ஓபிஎஸ் இணைவார்: பெங்களூரு புகழேந்தி நம்பிக்கை

Published on

சேலம்: அதிமுக சிதறிப் போகாமல் இருப்பதற்காக, இபிஎஸ் அழைத்தால், ஓபிஎஸ் மீண்டும் இணைவார், என்று பெங்களூரு புகழேந்தி நம்பிக்கை தெரிவித்தார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜை விழாவில் பங்கேற்க, ஓ.பன்னீர் செல்வம் அறிவுறுத்தல்படி சேலம், நாமக்கல், ஈரோடு உள்பட பல மாவட்டங்களில் இருந்து பலர் செல்கிறோம். பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குரு பூஜை விழாவுக்கு இபிஎஸ் செல்லவில்லை. இதற்கு முறையான விளக்கத்தை அவர் அளிக்க வேண்டும்.

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளக்கூடிய தலைவர் ஓபிஎஸ். அதிமுக சிதறிப் போகாமல் ஒற்றுமையுடன் இருப்பதற்காக, இபிஎஸ் அழைத்தால் அவருடன் ஓபிஎஸ் இணைவார். ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த கே.பி.முனுசாமிக்கு, ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர் அரசியல் வாழ்க்கை வந்தது.

அவர், பன்னீர் செல்வத்தின் ஆதரவைப் பெற்றுதான் பதவிகளை பெற்று வளர்ச்சி அடைந்தார். ஆனால் தற்போது, ஓபிஎஸ்-ஐ அவர் அவதூறாகப் பேசி வருகிறார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இபிஎஸ்-ஐ விசாரிக்கக் கூடாது; அவரை கைது செய்ய வேண்டும், என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in