

தொழில்முனைவோர் பயன்பெறும் வகையில் காப்பீடு, இடர் மேலாண்மை குறித்த பயிற்சி சென்னையில் வருகிற 29-ம் தேதி நடைபெறு கிறது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் நிறுவனமான தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சென்னை கிண்டியில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது. முதல் தலை முறை தொழில்முனைவோர் மேம் பாட்டுத் திட்டம், பிரதமர் சுய வேலை வாய்ப்புத் திட்டம், நகர்ப்புற வேலை யில்லா இளைஞர் சுய வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்து தொழில்முனைவோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
தற்போது தொழில் நடத்திக் கொண்டு இருக்கும் தொழில்முனை வோர் பயன்பெறும் வகையில் காப்பீடு மற்றும் இடர் மேலாண்மை பற்றிய பயிற்சியை வருகிற 29-ம் தேதி நடத்த இருக்கிறது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த பயிற்சியில் காப்பீடு, இடர் மேலாண்மை, காப்பீடு கொள்கைகள், காப்பீடு வகைகள், நஷ்டஈடு கோரும் முறை குறித்து தொழில்முனைவோர் அறிந்துகொள்ளலாம். இது தொடர் பாக கூடுதல் தகவல் அறிய 044-22252081, 22252082 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.