தென் இந்தியாவை கலக்கிய பிரபல கார் திருடன் கைது

தென் இந்தியாவை கலக்கிய பிரபல கார் திருடன் கைது
Updated on
1 min read

தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திராவில் கார்கள் பழுது பார்க் கும் மையம் வைத்து, கார்களை திருடி விற்ற பிரபல கார் திருடனை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை அசோக் நகர் அருகே எம்.ஜி.ஆர் நகர் பாரதிதாசன் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரை மர்ம நபர்கள் 2 பேர் திருடி சென்றனர். இந்த கார் திருட்டு சம்பவம் அருகே இருந்த ஒரு வீட்டின் கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அதில் காரை திருடும் நபர்களின் உருவங்கள் தெளிவாக தெரிந்தன. அதை வைத்து அசோக் நகர் போலீஸார் விசாரணையை தொடங்கினர். சென்னையில் கார் திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடந்து வந்ததை தொடர்ந்து, கார் திருட்டு கும்பலை பிடிக்க அசோக் நகர் காவல் உதவி ஆணையர் அரிக் குமார் தலைமையில் தனிப்படை யும் அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் நடத்திய விசாரணையில், புதுப்பேட்டை யில் கார் பழுது பார்க்கும் கடை வைத்திருக்கும் அப்பாஸ் என்பவர் கார்களை திருடி விற்பனை செய்வது தெரிந்தது. அப்பாஸை கைது செய்து விசாரணை நடத்திய தில் பல தகவல்கள் தெரியவந்தன.

இவர் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் கார்கள் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். திருடப்படும் கார் களை பிரித்து, அதன் பாகங்களை எடுத்து விற்றுள்ளார். சில கார் களை அப்படியே விற்றுள்ளார். இதற்கு கேரளாவை சேர்ந்த ரியாஸ் என்பவர் உதவி செய்துள்ளார்.

சென்னையில் பல இடங் களிலும், திருவண்ணாமலை யிலும் இவர் கார்களை திருடி யிருக்கிறார். இதுவரை 30-க்கும் மேற்பட்ட கார்களை திருடியிருப் பது விசாரணையில் தெரியவந் துள்ளது. நீண்ட நாட்களாக சாலையில் நிறுத்தப்படும் கார் களே இவர்களின் முதல் குறி. அப்பாஸிடம் இருந்து இதுவரை 8 கார்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. வெளிமாநிலங்களில் இவர் பதுக்கி வைத்திருக்கும் கார்களையும் சென்னை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. இவரது கூட்டாளி ரியாஸ் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in