Published : 18 Nov 2016 08:55 AM
Last Updated : 18 Nov 2016 08:55 AM

கண்டலேறு அணையில் இருந்து மீண்டும் திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரிக்கு வந்தது

சென்னை குடிநீர் தேவைக்காக கண்ட லேறு அணையில் இருந்து மீண்டும் திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் நேற்று காலை பூண்டி ஏரியை வந்தடைந்தது.

ஆந்திர அரசு, சென்னை குடிநீர் தேவைக்காக தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி ஒவ்வொரு ஆண்டும் இரு கட்டங்களாக 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடுகிறது.

அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கு முதல் கட்டமாக ஜூலை 1-ம் தேதி முதல், கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி நீரை ஆந்திர அரசு திறந்து விடவேண்டும். ஆனால், ஆந்திர அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால், அந்நீரை ஆந்திர அரசு திறந்துவிடாமல் இருந்தது. இந்நிலையில், சென்னை யின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதி நீரை, கடந்த மாதம் 10-ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து, கிருஷ்ணா கால்வாயில் திறந்து விட்டது ஆந்திர அரசு.

கண்டலேறு அணையில் இருந்து தொடக்கத்தில் விநாடிக்கு 200 கனஅடி திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீரின் அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டு, கடந்த 6-ம் தேதி விநாடிக்கு 1,500 கனஅடியாக உயர்த்தப்பட்டது.

இதற்கிடையே தமிழகம் நோக்கி வந்த கிருஷ்ணா நீர், கடந்த மாதம் 18-ம் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே தாமரைக்குப்பத்தில் உள்ள ஜீரோ பாயிண்டுக்கு வந்தடைந்தது. தொடர்ந்து அந்த நீர், ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரிக்கு கடந்த மாதம் 20-ம் தேதி வந்தடைந்தது.

அதே நேரத்தில், கிருஷ்ணா கால்வாயில் இருந்து மோட்டார் மூலம் ஆந்திர விவசாயிகள் சட்ட விரோதமாக கிருஷ்ணா நதி நீரை உறிஞ்சியதால், கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர், தமிழக எல்லைக்கு மிக குறைந்த அளவில் வந்துகொண்டிருந்தது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, கண்டலேறு அணையில் இருந்து நீரை திறப்பதை கடந்த 7-ம் தேதி தற்காலிகமாக நிறுத்தியது ஆந்திர அரசு. பூண்டி, புழல் உள்ளிட்ட ஏரிகளின் நீர் இருப்பு கணிசமாக குறைந்து வருவதால், கண்டலேறு அணையில் இருந்து மீண்டும் கிருஷ்ணா நதி நீரை திறந்துவிட வேண்டும் என்று தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள், ஆந்திர அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து, கடந்த 9-ம் தேதி காலை, கண்டலேறு அணையில் இருந்து மீண்டும் சென்னையின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா கால்வாயில் விநாடிக்கு 500 கனஅடி வீதம் கிருஷ்ணா நதி நீரை ஆந்திர அரசு திறந்துவிட்டது. அந்த நீர், கடந்த 10-ம் தேதி காலை விநாடிக்கு ஆயிரம் கனஅடியாகவும், கடந்த 11-ம் தேதி மாலை விநாடிக்கு 1,500 கன அடியாகவும் உயர்த்தப்பட்டது.

கிருஷ்ணா நதி நீர், கண்டலேறு அணையில் இருந்து, 152 கி.மீ. தூரமுள்ள தமிழக எல்லையான தாமரைக்குப்பத்தில் உள்ள ஜூரோ பாயிண்டுக்கு கடந்த 15-ம் தேதி நள்ளிரவு வந்தடைந்தது. அப்போது, 25 கனஅடியாக வந்த கிருஷ்ணா நதி நீர், ஜீரோ பாயிண்டில் இருந்து 25 கி.மீ., தூரத்தில் உள்ள பூண்டி ஏரியை நேற்று காலை 6.45 மணிக்கு வந்தடைந்தது. அப்போது, பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 20 கனஅடி கிருஷ்ணா நதி நீர் வந்துகொண்டிருந்தது.

மேலும், கண்டலேறு அணையில் இருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்டுள்ள கிருஷ்ணா நதி நீரின் அளவு நேற்று காலை விநாடிக்கு 1,700 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், நேற்று காலை நிலவரப்படி, 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு 104 மில்லியன் கன அடியாக உள்ளது. தற்போது, பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வர தொடங்கியுள்ளதால், படிப்படியாக பூண்டி ஏரியின் நீர் இருப்பு அதிகரிக்கும் என்கிறார்கள் பொதுப்பணித் துறை அதிகாரிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x