

அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 26-ம் தேதி தொடங்கியது. உழைப்பாளி மக்கள் கட்சி சார்பில் பி.தேக்கமலை, சுயேச்சை யாக எம்.சுகுமாரன் ஆகியோர் அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் சைபுதீனி டம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரை 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
தஞ்சாவூர் தொகுதியில்…
தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதியில் கோட்டாட்சியரும் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவல ருமான சி.சுரேஷிடம், தஞ்சாவூர் வடக்குவாசலைச் சேர்ந்த மாணிக் கம் மகன் எம்.சந்தோஷ்(37), சுயேச்சை வேட்பாளராக போட்டி யிட விருப்பம் தெரிவித்து நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
தஞ்சாவூர் தொகுதியில் நேற்றுவரை 7 வேட்பாளர்கள் பெயரில் 11 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.