

மதுரை: நாகர்கோவிலை சேர்ந்த சுயம்புலிங்கம், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “பல பள்ளிகளில் ஆட்டோக்களில் மாணவர்களை ஏற்றிச் செல்கின்றனர். ஆட்டோக்களில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்வது விதி மீறல் ஆகும். பள்ளி வாகனங்களுக்கு தனியாக விதிமுறைகள் உள்ளன. ஆனால் ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு எந்த விதிமுறையும் இல்லை. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை பதில் அளிக்க வேண்டும். விசாரணை 3 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது’’ என்றனர்.