தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை
Updated on
1 min read

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்துகொண்டார்.

கடந்த சில நாட்கள்முன் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், அதன்பின் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கின் ஆலோசனை கூட்டம் போன்றவற்றில் பங்கேற்றார். நேற்றுகாலை சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கரின் முழு திருவுருவச் சிலையை தமிழக முதல்வர் திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பங்கேற்றார். இதனிடையே, தான் பரிசோதனை மேற்கொள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளார். என்றாலும், பரிசோதனை முடிந்து முதல்வர் உடனடியாக வீடு திரும்பினார்.

அதேநேரம், மருத்துவமனை தரப்பில் இருந்து வெளியாகியுள்ள அறிக்கையில், "இது வழக்கமான பரிசோதனை தான். முதுகுவலி இருந்ததன் காரணமாக வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக முதல்வருக்கு மேற்கொள்ளப்பட்டது." என்று சொல்லப்பட்டுள்ளது.

இதனிடையே, முதல்வர் மருத்துவமனையில் பரிசோதனைக்கு சென்றபோது போரூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in