பல்லாவரம் நகராட்சி
பல்லாவரம் நகராட்சி

தமிழகத்தில் முதல் முறையாக நகர சபைக் கூட்டம்: நவ.1-ல் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

Published on

சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக நவம்பர் 1-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நகர சபைக் கூட்டம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேயர் அல்லது தலைவர், நிலைக்குழு தலைவர், மண்டல தலைவர் உள்ளிட்ட பதவிகள் உள்ளன. இந்நிலையில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு கமிட்டி மற்றும் ஏரியா சபை அமைப்பதற்கான விதிகளை கடந்த ஜூலை மாதம் தமிழக அரசு வெளியிட்டது.

இதன்படி, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் வார்டு கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகளில் 5 லட்சம் வரை மக்களின் தொகை உள்ள வார்டுகளில் 4 முதல் 5 ஏரியா சபைகளும், 5 முதல் 10 லட்சம் வரை உள்ள மக்கள் தொகை உள்ள வார்டுகளில் 6 முதல் 9 ஏரியா சபைகளும், 10 லட்த்திற்கு மேல் மக்கள் தொகை உள்ள வார்டுகளில் 10 ஏரியா சபைகளும், நகராட்சிகளில் ஒரு வார்டில் 4 சபைகளும், பேரூராட்சியில் ஒரு வார்டில் 3 சபைகளும் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் முதல்முறையாக மாநகர சபை கூட்டம் நடைபெற உள்ளது. பல்லாவரம் அருகே பம்மல் 6-வது வார்டில் நவம்பர் 1-ம் தேதி மாநகர சபைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மக்களின் குறைகளை கேட்கிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in