

சிவகங்கை: விடுதலைப் போராட்ட வீரர்கள் மருது சகோதரர்களின் குருபூஜைவிழா காளையார்கோவிலில் நேற்றுநடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மரியாதை செலுத்தினர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் நேற்று சமுதாயத் தலைவர்கள் சார்பில், விடுதலைப் போராட்ட வீரர்கள் மருது சகோதரர்களின் குருபூஜை நடைபெற்றது. இதையொட்டி அவர்களது நினைவிடத்தில் மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம்எம்பி, ஓபிஎஸ் அணி சிவகங்கை மாவட்டச் செயலாளர் அசோகன், செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், முன்னாள் எம்பி பவானி ராஜேந்திரன், ராமநாதபுரம் எம்எல்ஏ காதர்பாட்சாமுத்துராமலிங்கம், சிவகங்கை நகராட்சித் தலைவர் துரைஆனந்த் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
அதிமுக சார்பில் செந்தில்நாதன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரன், முன்னாள் எம்எல்ஏ நாகராஜன், பாஜக சார்பில் மாநிலபொதுச் செயலாளர் ராம.சீனிவாசன், மாவட்டத் தலைவர் மேப்பல்சக்தி, கோட்டப் பொறுப்பாளர் ராஜேந்திரன், காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி, அமமுக மாவட்டச் செயலாளர் தேர்போகி பாண்டி, முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், நடிகருமான கருணாஸ், இந்து மக்கள்கட்சி நிறுவனர் அர்ஜூன்சம்பத், நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிகுமரன், பாமக மாநிலப் பொருளாளர் திலகபாமா, மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் சேதுராமன், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் தர் வாண்டையார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னதாக உள்ளூர் மக்கள் சார்பில் 500-க்கும் மேற்பட்டோர் முளைப்பாரி, பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் வாண வேடிக்கையுடன் ஊர்வலமாக வந்து நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.