சந்தாதாரர்கள் இறந்துவிட்டால் பிஎப், பென்ஷன் தொகையை ஒரு வாரத்துக்குள் வழங்க உத்தரவு

சந்தாதாரர்கள் இறந்துவிட்டால் பிஎப், பென்ஷன் தொகையை ஒரு வாரத்துக்குள் வழங்க உத்தரவு
Updated on
1 min read

சந்தாதாரர்கள் இறந்துவிட்டால், அவர் களின் வாரிசுக்கு பிஎப் மற்றும் பென்ஷன் தொகையை விண்ணப்பித்த ஒரு வாரத்துக்குள் வழங்க உத்தரவிடப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக தாம்பரம் மண்டல அலுவலக வைப்புநிதி ஆணையர் ப.செந்தில்குமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

7 நாட்களுக்குள்..

வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தனது சந்தாதாரர்களுக்கு மேம்படுத் தப்பட்ட தரமான சேவையை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற் போது ‘பிரகதி’ என்ற திட்டத்தின்கீழ் சந்தாதாரர்களுக்கு பிஎப், பென்ஷன் தொகையை காலதாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சந்தாதாரர்கள் இறந்துவிட்டால், அவர் களின் குடும்பத்துக்கு பிஎப், பென்ஷன் தொகையை விண்ணப்பித்த 7 நாட் களுக்குள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் தனி உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, தொழிலாளர்கள் இறந்து விட்டால் அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுதாரர்கள் மற்றும் தொழிலதிபர்கள், அந்த உறுப்பினரின் பிஎப், பென்ஷன் விண்ணப்பப் படிவங்களுடன் தேவையான சான்றிதழ்களை வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் குறித்த காலத்தில் சமர்ப்பித்து விரைவான சேவையை பெறமுடியும்.

மேலும், 58 வயது அடைந்து ஓய்வு பெறும் ஊழியர்களும் பிஎப், பென்ஷன் தொகையை தாமதமின்றி பெறலாம். இதற் காக ஓய்வுபெறும் தேதிக்கு 14 நாட்களுக்கு முன்பாக வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தொழிலதிபர்களும் ஓய்வுபெறும் ஊழியரின் இறுதி மாத சந்தாவை ஒரு மாதத்துக்கு முன்பாகவே செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். இதுகுறித்த கூடுதல் விவரங்களை 044-2226 4376 / 2297 / 1925 ஆகிய தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு அறியலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in