Published : 28 Oct 2022 04:25 AM
Last Updated : 28 Oct 2022 04:25 AM

பொள்ளாச்சி | பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த அரசு பேருந்து ஓட்டுநர்: பயணிகள் உயிர் தப்பினர்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஜமீன் கோட்டாம்பட்டியை சேர்ந்தவர் மருதாச்சலம் (59), அரசு பேருந்து ஓட்டுநர். இவர் நேற்று பொள்ளாச்சியிலிருந்து புறப்பட்டு குஞ்சிபாளையம், அகிலாண்டபுரம் வழியாக மீண்டும் பொள்ளாச்சியை வந்தடையும் வழித்தட எண் 7 என்ற அரசு பேருந்தை மாலை 5 மணிக்கு ஓட்டிச் சென்றுள்ளார்.

பேருந்தின் நடத்துநராக கருப்புச்சாமி (31) என்பவர் பணியாற்றினார். பேருந்து மீன்கரை சாலையில், தனியார் திருமண மண்டபம் அருகே சென்றபோது, திடீரென்று ஓட்டுநர் மருதாச்சலத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக பேருந்தை சாலையின் இடதுபக்கத்துக்கு திருப்பி திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவரில் மோதி நிறுத்திய பின்னர் மயக்கமடைந்தார்.

பயணிகள் அவரை மீட்டு 108 அவசரகால ஊர்தி மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மருதாச்சலம் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும், சமயோசிதமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் மருதாச்சலம் உயிரிழந்தது சக ஓட்டுநர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x