தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நவ.23-ல் நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நவ.23-ல் நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் 23-ம் தேதி நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடகம் மறுத்து வருகிறது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் தண்ணீர் தர மாட்டோம் என கர்நாடகம் பிடிவாதமாக உள் ளது.

அதுபோல உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகமாகும். இதனால் காவிரி பாசன மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சாகுபடியும் நடைபெறவில்லை. பெரும்பாலான பகுதிகளில் சம்பா சாகுபடியும் நடைபெறவில்லை.

எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத் தியும், காவிரியில் இருந்து கர்நாடகம் தண்ணீர் திறக்கக் கோரியும் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் வரும் 23-ம் தேதி டெல்லியில் நாடாளுமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் இருந்து ஆயிரத் துக்கும் அதிகமான விவசாயி கள் அதில் பங்கேற்க உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in