3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நாளை நிறுத்தம்

3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நாளை நிறுத்தம்
Updated on
1 min read

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நெம்மேலியில் நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் இயங்கி வருகிறது. இதில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதன் காரணமாக அடையார், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சில இடங்களில் நாளை (அக்.29) காலை 9 மணி முதல் 30-ம் தேதி காலை 9 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக குடிநீரைசேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள அடையாறு, வேளச்சேரி, பெசன்ட் நகர், திருவான்மியூர் பகுதி மக்கள் 8144930913, கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி - 8144930914, ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் - 8144930915 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in