3 தொகுதி தேர்தல்: காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு அறிவிப்பு

3 தொகுதி தேர்தல்: காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு அறிவிப்பு
Updated on
1 min read

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப் பரங்குன்றம் தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் 19-ம் தேதி தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப் பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக, திமுக, தேமுதிக, பாமக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளன. திமுகவுக்கு காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.

3 தொகுதிகளிலும் திமுக வேட் பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச் சாரம் செய்ய காங்கிரஸ் சார்பில் தேர்தல் பணிக் குழுக்களை அக்கட்சி யின் மாநிலத் தலைவர் சு.திருநாவுக் கரசர் அறிவித்துள்ளார்.

அதன் விவரம்: தஞ்சாவூர் தொகுதிக்கு முன்னாள் எம்.பி. கே.எஸ்.அழகிரி தலைமையில் பி.வி.ராஜேந்திரன், டி.கிருஷ்ண சாமி வாண்டையார், பி.ஜி.ராஜேந்திரன், டி.ஆர்.லோகநாதன், எஸ்.எம்.பி. துரைவேலன், டி.புஷ்ப ராஜ், எஸ்.ராஜ்குமார், ஜி.ராஜேந் திரன், டி.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 20 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சி தொகுதிக்கு முன் னாள் எம்.எல்.ஏ. வி.ராமநாதன் தலைமையில் பேங்க் கே.சுப்பிர மணியன், ஜெரோம் ஆரோக்கிய ராஜ், ஆர்.சி.பாபு, என்.ஜெயப் பிரகாஷ், லூயிஸ் அடைக்கலராஜ், விஜய் இளஞ்செழியன், ஜோதி மணி, ஆர்.சொக்கலிங்கம், அப்துல்கனி ராஜா, சிவசக்திவேல் கவுண்டர், ஆர்.செழியன், ஜே.லோகாம்பாள், திருச்சி சந்திரன், பி.டி.தனகோபால் ஆகிய 14 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப் பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில் ஜே.எம்.ஆருண், மாணிக் தாகூர், பெ.விஸ்வநாதன், ஆர்.ஜெயராமன், வி.கார்த்தி கேயன், கே.வி.வி.ரவிச்சந்திரன், பி.சத்தியமூர்த்தி, எம்.பி. முருகேசன், எஸ். வேலாயுதம், ஏ.தெய்வநாயகம், கே.எஸ்.கோவிந்தராஜன், ஏ.எஸ்.பி. ஜான்சி ராணி, துரைராஜ் ஆகிய 13 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in