தட்டுப்பாட்டை சமாளிக்க புதிய மின்திட்டங்கள் மூலம் 3,000 மெகாவாட் உற்பத்தி: பூர்வாங்கப் பணிகள் தொடக்கம்

தட்டுப்பாட்டை சமாளிக்க புதிய மின்திட்டங்கள் மூலம் 3,000 மெகாவாட் உற்பத்தி: பூர்வாங்கப் பணிகள் தொடக்கம்
Updated on
1 min read

அதிகரிக்கும் மின்தேவையை கருத்தில் கொண்டு, பல்வேறு புதிய திட்டங்கள் மூலம் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் மின்தேவை அதிகரித்து வருகிறது. மின்தேவையை சமாளிக்க மின் வாரியம் பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து கேட்டபோது தமிழ் நாடு மின்உற்பத்தி, பகிர்மானக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் புதிய தொழிற் சாலைகள், குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மின்தேவையும் அதிகரிக்கிறது. கடந்த மே மாதம் கோடைகாலத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 350 மில்லியன் யூனிட் மின்சாரம் பயன் படுத்தப்பட்டுள்ளது. வருங்காலத் தில் மின்தேவை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு 3 ஆயிரம் மெகாவாட் மின் சாரம் உற்பத்தி செய்ய திட்ட மிடப்பட்டுள்ளது. அடுத்த 4 ஆண்டுகளில் இது படிப்படியாக உற்பத்தி செய்யப்படும்.

முதல்கட்டமாக, எண்ணூர் அனல் மின்நிலையம், வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின்சாரம் தயாரிப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக இந்த மின்நிலையங்கள் ரூ.3,900 கோடி செலவில் விரிவாக்கப்பட உள்ளன. இந்த விரிவாக்கப் பணிகள் 2018-ம் ஆண்டு நிறைவடையும்.

நீராவி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்காக பாய்லர் டர்பைன் ஜெனரேட்டர்கள் அமைக்க ‘பெல்’ நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திரு வாடானை அருகே உப்பூர் அனல் மின் திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. 1,600 மெகாவாட் திறன் கொண்ட இந்த மின்நிலையம் ரூ.9,600 கோடி செலவில் நிறுவப்பட உள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in