ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் மதுக் கடைகள் மூடல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் மதுக் கடைகள் மூடல்
Updated on
1 min read

ராமநாதபுரம்: தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை (அக்.28) முதல் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்:”பசும்பொன்னில் முத்துரா மலிங்கத்தேவரின் 115-வது ஜெயந்தி மற்றும் 60-வது குரு பூஜை விழா அக்.28 முதல் 30-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இவ்வி ழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் (டாஸ்மாக்), அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்களும் மற்றும் எப்.எல்.2, எப்.எல்.3 உரிமம் பெற்ற மதுபானக் கூடங்களும் மூடப்படும்.

விதிக்கு முரணாக இந்த மூன்று நாட்களில் மதுபானங்கள் விற்பனை செய்வோர் மீதும் மதுபான வகைகளை சட்ட விரோதமாக பதுக்கி வைத்தா லோ அல்லது மதுபான வகை களை ஓர் இடத்திலிருந்து பிற இடத்துக்கு எடுத்துச் சென்றாலோ சம்மந்தப்பட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு ஆட்சியர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in