

எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டா லினுக்கு நியமிக்கப்பட்ட சிறப்பு உதவியாளரைத் திரும்பப் பெற்று சட்டப்பேரவைச் செயலர் பிறப் பித்த உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம், அவரை மீண்டும் அதே பதவியில் பணியமர்த்த உத்தரவிட்டுள்ளது.
திமுக பொருளாரும், சட்டப் பேரவை எதிர்கட்சித் தலைவரு மான மு.க.ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
கடந்த 1979-ம் ஆண்டு அரசு ஆணைப்படி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருக்கென தனியாக சிறப்பு உதவியாளரை நியமித்துக்கொள்ள வழிவகை உள்ளது. அதன்படி, எனக்கு அரசு சார்பில் சிறப்பு உதவியாளராக தலைமைச் செயலக பணியில் உள்ள எம்.ஆதிசேஷன், துணைச் செயலாளர் அந்தஸ்தில் நியமிக்கப் பட்டார்.
கடந்த ஆகஸ்டில் திமுக சார்பில் சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டம் நடத்தினோம். இதனால் கோபமடைந்த தமிழக அரசு, எனக்கு நியமிக்கப்பட்ட சிறப்பு உதவியாளரைத் திரும்பப் பெற்ற துடன் அவரைப் பதவியிறக்கமும் செய்தது. இது சட்டவிரோதமானது. அரசியல் ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கை.
எனவே, எனக்கு மீண்டும் அதே துணைச் செயலாளர் அந்தஸ்தில் சிறப்பு உதவியாளரை நியமிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் ஸ்டாலின் கோரியிருந்தார்.
இந்த மனு, நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மு.க.ஸ்டாலின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து, சிறப்பு உதவி யாளரைத் திரும்பப் பெற்று சட்டப்பேரவைச் செயலாளர் பிறப் பித்த உத்தரவை ரத்து செய்த நீதிபதி, அவரை மீண்டும் அதே பதவியில் விரைவில் பணியமர்த்த வேண்டும் என உத்தரவிட்டார்.