Published : 27 Oct 2022 06:34 AM
Last Updated : 27 Oct 2022 06:34 AM
சென்னை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரம் குறித்து முதல்வர் வாய் திறக்காமல் இருப்பது ஏன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார். முத்துராமலிங்கத் தேவரின் 115-வது ஆண்டு ஜெயந்தி விழாவைமுன்னிட்டு வரும் 30-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் திரு உருவ சிலைக்கு மரியாதை செலுத்துவதற்கு அனுமதியும், உரிய பாதுகாப்பும் வழங்கக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர்ஜெயகுமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வேதனைக்கும் கண்டனத்துக்கும் உரியது. இந்தசம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வாய் திறக்காமல் உள்ளார். மிகப்பெரிய அசம்பாவிதம் ஏதாவது நடத்த திட்டமிட்டிருக்கலாம். இச்சம்பவம் குறித்து தலைமைச் செயலகத்தில் தற்போதுதான் கூட்டம் நடந்திருக்கிறது. இத்தனை நாள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இது சம்பந்தமாக காவல் துறையினர் 75 கிலோவெடி மருந்தை கைப்பற்றியிருக்கிறார்கள். முதல்வர் வாய் திறக்காமல் இருப்பது ஏன் என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் கேள்வியாக இருக்கிறது.
சசிகலா, ஓபிஎஸ் பொறுப்பு: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையில் ஓய்வுபெற்ற நீதிபதி தெளிவாகதெரிவித்திருக்கிறார். அதேபோல் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் இதில் தனது பங்குஎதுவும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். சசிகலா, ஓபிஎஸ் ஆகியோர்தான் பொறுப்பெடுத்திருந்தார்கள். முதல்வரின் அனைத்துவிவகாரங்களையும் ஓபிஎஸ்தான்பார்த்துக்கொண்டிருந்தார். இவர்கள் 2 பேரும்தான் குற்றம் செய்தவர்கள் என்ற அடிப்படையில்தான்ஆறுமுகசாமி ஆணையத்தின் முடிவு இருக்கிறது. இந்த முடிவின்அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதுதான் இதற்கு ஒரு தீர்வாக இருக்கும். பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் மழைநீருக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இறந்துள்ளார். இந்த பணியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யார் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அப்படிஎதுவும் செய்யவில்லை. அரசின் தவறுக்காக வெறும் ரூ.5 லட்சம் மட்டும் கொடுத்தால் என்ன நியாயம்? இந்த பணம் அந்த குடும்பத்துக்கு ஈடாகுமா?
வாய் திறக்காத அரசு: ஆந்திராவில் தமிழக மாணவர்கள் தாக்கப்படும்போதும், தமிழ்நாட்டு மக்கள் தாக்கப்படும்போதும், தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்படும்போதும், தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு கேள்விக்குறி ஏற்படும்போதும் இப்படி எந்த நிலையிலும் வாய் திறக்காமல் இருக்கின்ற ஒரே அரசாங்கம் திமுக அரசாங்கம்தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT