Published : 29 Nov 2016 08:46 AM
Last Updated : 29 Nov 2016 08:46 AM

கூட்டுறவு வங்கிகளில் வழக்கம்போல பணப் பரிவர்த்தனை நடக்க வேண்டும்: தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வேண்டுகோள்

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் வழக்கம்போல பணப் பரிவர்த்தனை நடக்க நட வடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை தமிழக அரசு வலி யுறுத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் சு.கிருநாவுக் கரசர் கூறினார்.

கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த 8-ம் தேதி அறிவித்தது. இதைக் கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தலைமை வகித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக் கரசர் பேசியதாவது:

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நாளில் இருந்து பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். காய்கனி வர்த்தகம், பூ வியாபாரம் உட்பட அனைத்து சிறு வியாபாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

கட்டுமானப் பணிகள் பாதிப்பு

கட்டுமானப் பணிகள் பாதிக்கப் பட்டதால், பிஹார் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கட்டிட வேலைக் காக வந்தவர்களில் பலர் வேலை யில்லாமல் சொந்த ஊர் திரும்பிவிட்டனர். வங்கிகள், ஏடிஎம் மையங்களில் இன்னமும் கூட்டம் குறையவில்லை. பல ஏடிஎம் மையங்கள் மூடியேதான் இருக்கின்றன. தனியார் ஊழி யர்கள், அரசுப் பணியாளர்களுக்கு மாத ஊதியம் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

அன்றாடத் தேவைக்குப் பணம் எடுப்பதற்காக வங்கிகள், ஏடிஎம் மையங்கள் முன்பு நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களை, கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களால் அனுப்பப் பட்டவர்கள் என்று கூறுவது அபாண்டமான குற்றச்சாட்டு. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே பிஹார், தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் ரியல் எஸ்டேட் தொழிலில் பாஜகவினர் பெரு மளவு முதலீடு செய்துவிட்டனர்.

உரிய முறையில் திட்டமிடாமல்..

நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கும் முன்பு, மக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு உரிய முறையில் திட்டமிடாததைக் கண்டித்து நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியிலும் காங்கிரஸ் குரல் கொடுத்து வருகிறது. இதற்கு பாஜகவைச் சேர்ந்த சத்ருகன் சின்கா, சுப்பிரமணியன் சுவாமி மட்டுமல்லாமல் அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனாவும் ஆதரவு தெரிவித்தது. இப்பிரச்சினை தொடர்பாக டெல்லியில் நடந்த போராட்டத்தில் அதிமுக நாடாளு மன்ற குழுத் தலைவர் கலந்துகொண்டது வரவேற்கத் தக்கது.

அரசு வலியுறுத்த வேண்டும்

மத்திய அரசின் திட்டமிடாத செயலால் தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கி களிலும் பணப்பரிவர்த்தனை முடங்கியுள்ளது. இதனால் விவ சாயிகள், பொதுமக்கள் அவதிப் படுவதை எடுத்துக்கூறி அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் வழக் கம்போல பணப் பரிவர்த்தனை நடக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட் டத்தில் கலந்துகொண்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டு சில மணி நேரத்தில் விடுவிக் கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x