Published : 10 Nov 2016 09:50 AM
Last Updated : 10 Nov 2016 09:50 AM

விஐடி நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம்: ஜி.விசுவநாதன் தொடங்கிவைத்தார்

விஐடி பல்கலைக்கழகத்தில் வரும் கல்வியாண்டில் (2017-2018) பி.டெக் பொறியியல் பட்டப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பங்கள் விநியோகத்தை வேந்தர் ஜி.விசுவநாதன் நேற்று தொடங்கிவைத்தார்.

2017-2018 கல்வியாண்டில் விஐடி பல்கலைக் கழக வேலூர் வளாகத்தில் பி.டெக் பயோ மெடிக்கல் இன்ஜினீயரிங், பயோ டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினீயரிங் (ஸ்பெசலைசேஷன் இன் பயோ இன்பர்மேடிக்ஸ்) சிவில் இன்ஜினீயரிங், கெமிக்கல் இன்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினீயரிங், எலக்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேசன் இன்ஜினீயரிங், இன்ஜினீயரிங் இன்பர் மேஷன் டெக்னாலஜி, மெக்கானிக்கல் இன்ஜி னீயரிங், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் (ஸ்பெசலைசேஷன் இன் எனர்ஜி இன்ஜினீ யரிங்), புரடக்சன் அண்ட் இண்டஸ்டிரியல் இன்ஜினீயரிங் உள்ளிட்ட பொறியியல் பட்டப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.

சென்னை விஐடி வளாகத்தில் பிடெக், சிவில் இன்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங், ஃபேஷன் டெக்னாலஜி எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ரா னிக்ஸ் இன்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்புகளுக்கும், விஐடி அமராவதி (ஆந்திரா) வளாகத்தில் மெக்கானிக் கல் இன்ஜினீயரிங் எலக்டரானிக்ஸ் இன்ஜினீ யரிங், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினீயரிங் (ஸ்பெசலைசேஷன் இன் டேட்டா அனலிடிக்ஸ்) மற்றும் நெட்வொர்க் செக் யூரிட்டி உள்ளிட்ட பொறியியல் பட்டப் படிப்புகளுக்கும், விஐடி போபால் வளாகத் தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினீ யரிங், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங், எலக்ட் ரானிக்ஸ் அண்டு கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் ஆகிய பொறியியல் பட்டப் படிப்பில் சேர நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.

இந்த நுழைவுத் தேர்வுகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை ஆன்லைன் முறையில் நாட்டில் உள்ள 119 நகரங் களிலும், துபாய், குவைத் மற்றும் மஸ்கட் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் நடத்தப்பட உள்ளன.

நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் முக்கிய நகரங்களில் உள்ள 42 தலைமை தபால் நிலையங்களில் நேற்று முதல் விற்பனை செய்யப்பட்டன. விண்ணப்பக் கட்டணம் ரூ.990 செலுத்தி, பெற்றுக்கொள்ளலாம். மேலும், Director -UG Admissions, VIT University என்ற பெயரில் ரூ.990-க்கு வங்கி வரைவு காசோலை செலுத்தியும் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.vit.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ரூ.970 செலுத்தியும் விண்ணப்பிக்கலாம். வரும் பிப்ரவரி மாதம் 28-ம் தேதி விண்ணப்பிக்கக் கடைசி நாளாகும். மேலும், விவரங்களுக்கு www.vit.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x