Published : 21 Nov 2016 10:10 AM
Last Updated : 21 Nov 2016 10:10 AM

கான்பூர் ரயில் விபத்தில் பயணிகள் மரணம்: ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

கான்பூர் ரயில் விபத்தில் 90-க்கும் அதிகமான பயணிகள் இறந்த தற்கு பல கட்சிகளின் தலை வர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின்:

கான்பூர் ரயில் விபத்தில் 100-க்கும் அதிகமான பயணிகள் மரணமடைந்த தகவல் கேட்டு மிகவும் பரிதவித்துப் போனேன். ரயில் விபத்தில் மரணமடைந்தோர் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கெனவே கல்கா மெயில் கடந்த 2011-ல் தடம் புரண்ட போது 71 பேர் மரண மடைந்தனர். இதன் பின்னர் முன் னாள் அணுசக்தி கழக தலைவர் டாக்டர் அனில் கக்கோட்கர் தலைமையில் உயர் மட்டக்குழு ரயில் பாதுகாப்புக்காக விரிவான அறிக்கையை அளித்தது. விபத் தில்லாத இந்திய ரயில்வே என் பதே மத்திய அரசின் குறிக்கோள் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு கூறியிருந்தார். இந்த சூழலில் கக்கோட்கரின் பரிந்துரைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்:

அதிவேக ரயில் தடம்புரண்டதால் ஏராளமான பயணிகள் மரணமடைந்துள்ளனர். தண்டவாளக் கோளாறால் விபத்து ஏற்பட்டதாக விசா ரணைக்கு முன்பே ரயில்வே அமைச்சர் கூறியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.3.50 லட் சமும், படுகாயமடைந்தவர் களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று கூறியுள்ளது போதாது. எனவே, கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும்.

பாமக இளைஞரணித் தலை வர் அன்புமணி ராமதாஸ்:

கான்பூர் அருகே ரயில் தடம் புரண்டதில், ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். உயிரிழந் தோரின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித் துக்கொள்கிறேன்.

இதுவே கடைசி விபத்தாக இருக்க வேண்டும். இனியும் ஒருமுறை அதே காரணத்தினால் விபத்து ஏற்படுவதற்கு அனுமதிக் கக் கூடாது விபத்தில் உயிரிழந் தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும் இழப்பீடாக வழங்க வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:

விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து க்கொள்கிறேன். ரயில் விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண் டும். ரயில் விபத்தில் இறந்த வர்களின் குடும்பத்துக்கு அதிகபட்ச நஷ்ட ஈட்டை வழங்க வேண்டும்.

சமக தலைவர் சரத்குமார்:

கான்பூர் ரயில் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித் துக்கொள்கிறேன். இது போன்ற விபத்துகள் இனியும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x