காரைக்குடி கட்சி விழாவில் ப.சிதம்பரத்தை புறக்கணித்ததற்கு இளைஞர் காங். கண்டனம்

காரைக்குடி கட்சி விழாவில் ப.சிதம்பரத்தை புறக்கணித்ததற்கு இளைஞர் காங். கண்டனம்
Updated on
1 min read

காரைக்குடியில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடந்த விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் எம்பி, மாங்குடி எம்எல்ஏ ஆகியோரை புறக்கணித்ததற்கு இளைஞர் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

காரைக்குடி பெரியார் சிலை அருகே நேற்று முன்தினம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே தேசியத் தலைவராக வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் விழா நடத்தப்பட்டது.

இவ்விழாவை ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், மாங்குடி ஆகியோரை புறக்கணித்துவிட்டு நடத்தினர். இதற்கு சிவகங்கை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பீரவீன்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், மாங்குடி ஆகியோரிடம் விழா குறித்து தகவல் தெரிவிக்காததும், பேனரில் எம்பி, எம்எல்ஏ பெயர், புகைப்படம் இன்றி விழா நடத்துவதும் ஏற்புடையதல்ல. இது கட்சியின் வளர்ச்சிக்கு உகந்த செயல் அல்ல. இதில் சிவகங்கை மாவட்ட இளைஞர் காங்கிரசுக்கு உடன்பாடில்லை என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in