

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் பணியில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்களையும் ஈடுபடுத் திக் கொள்ளலாம். அதேபோல, கூடுதல் நேரம் பணிபுரியும் ஊழியர் களுக்கு உணவு, போக்கு வரத்து வசதி அளிக்க வேண் டும் என மத்திய நிதித்துறை கூடுதல் செயலாளர் தெரிவித் துள்ளார்.
மத்திய அரசு செல்லாது என அறிவித்துள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள், அஞ்சல கங்களில் மக்கள் மாற்றி வருகின்ற னர். தினமும் ஆயிரக்கணக் கானோர் வங்கிகளுக்கு வரு வதால் ஊழியர்கள் கூடுதல் பணிச்சுமையால் தவித்து வரு கின்றனர். எனவே வங்கிகள், அஞ்சலகங்கள் மட்டுமின்றி பிற அரசு துறைகளிலும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித் தர ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வங்கிகளில் ஷிப்ட் முறையில் ஊழியர்களை பணியில் ஈடு படுத்த வேண்டும். கூடுதல் நேரம் பணிபுரியும் ஊழியர்களுக்கு உணவு, போக்குவரத்துப்படி உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும். கூடுதல் நேரம் பணி யாற்றும் பெண் ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர் கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச் சலம், இந்திய வங்கிகள் கூட்டமைப்பு தலைவருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அந்தக் கடிதம், மத்திய நிதித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்து இந்திய வங்கிகள் கூட்டமைப்பு தலைவர் ராஜீவ் ரிஷிக்கு மத்திய நிதித்துறை கூடுதல் செயலாளர் கிரிஷ் சந்திர முர்மு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
உணவு, போக்குவரத்து வசதி
தற்போதைய சூழ்நிலையில் வங்கிகளில் ஊழியர்கள் கூடுதல் நேரம் பணியாற்றுகின்றனர். இத னால் ஏற்படும் சிரமத்தைப் போக்க ஷிப்ட் முறையில் ஊழியர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும். கூடுதல் நேரம் பணியாற்றும் ஊழியர்களுக்குத் தேவையான உணவு, போக்குவரத்து வச தியை ஏற்படுத்தித் தரவேண்டும். குறிப்பாக, பெண் ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
அதேபோல, வங்கிகளில் கூடுதல் கவுன்ட்டர்களை அமைத்து பொதுமக்களுக்கு பணத்தை மாற்றி வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்களையும் இப்பணி யில் ஈடுபடுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.