திமுகவினரை வளைக்கும் அதிமுகவினர்: விறுவிறுப்படைந்த திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் களம்

திமுகவினரை வளைக்கும் அதிமுகவினர்: விறுவிறுப்படைந்த திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் களம்
Updated on
2 min read

திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தலில் திமுகவினரை அதிமுகவினர் ரகசியமாக தங்களுக்கு ஆதரவாக வளைத்து வருவதாக கூறப்படுகிறது.

திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்கிறது. முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதால், தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், தலைமை கழக பேச்சாளர்களின் பிரச்சாரத்தை மட்டுமே அதிமுக சார்ந்துள்ளது.

அதிமுகவை சேர்ந்த தென் மாவட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தலைமையிலான பல்வேறு குழுவினர், வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

திமுகவில் ஐ.பெரியசாமி, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர்கள் சுரேஷ் ராஜன், பூங்கோதை ஆலடி அருணா, அனிதா ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு, கீதா ஜீவன் மற்றும் அக்கட்சியின் தென் மாவட்ட விஐபிகள் திருப்பரங்குன்றத்தில் குவிந்துள்ளனர்.

வேட்பாளர் சரவணனை ஆதரி த்து நவ.14, 15-ம் தேதிகளில் திருப்பரங்குன்றத்தில் ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். உடல்நல பாதிப்பு காரணமாக கருணாநிதி பிரச்சாரத்துக்கு வரவில்லை.

தேமுதிகவில், கடந்த இரண்டு நாளாக அக்கட்சியின் மகளிரணி செயலாளர் பிரேமலதா மட்டும் பிரச்சாரம் செய்கிறார். விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வர வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. அதனால், அக்கட்சியினர் சோர்ந்து போய் உள்ளனர்.

அதிமுகவினர், பெரும்பாலும் வீடு வாடகைக்கு எடுத்தும், லாட்ஜ், ஹோட்டல்களில் அறை எடுத்து தங்கியும் நிரந்தரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், திமுகவினர், தினமும் இரவு வீடுகளுக்கு சென்றுவிட்டு மறு நாள் காலை வந்துவிடுகின்றனர். ஐ.பெரியசாமி, இந்த தொகுதி பொறுப்பாளர் என்பதால் திமுக வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. அவர், தினமும் ‘பூத்’வாரியாக அதிருப்தி திமுகவினரை அழைத்து பேசுவதும், திமுக வெற்றியின் அவசியத்தை சொல்லியும் நெரு க்கம் பாராட்டுவதால் மனக் கசப்புகளை மறந்து தேர்தல் பணியில் அக்கட்சியினர் தீவிரம் காட்டத்தொடங்கியுள்ளனர்.

கடந்த முறை இந்த தொகுதியில் திமுக வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருந்ததாகவும், கடைசி நேரத்தில் அதிமுவினர் பணம் பட்டுவாடா செய்ததால் வெற்றி கைநழுவி போய்விட்டதாகவும் அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். அதனால், இந்த முறை வெற்றியை தட்டிப்பறிக்க அதிமுகவுக்கு நிகராக தேர்தல் செலவு செய்ய திமுக வேட்பாளர் தயாராக இருப்பதாகவும், அதற்கான தேர்தல் வியூகங்களை ஐ.பெரியசாமி வகுத்து வருவ தாகவும் கூறப்படுகிறது. ஒவ்வொரு ‘பூத்’திலும் தேர்தல் அலுவலகம் திறந்து, அந்த ‘பூத்’ நிர்வாகிகளில் ஒரு குழுவினரை பிரச்சாரத்துக்கும், மற்றொரு குழுவினரை அதிமுகவினரை கண்காணிக்கவும் அனுப்பி வைப் பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கிராம புறங்களில் கடந்த முறை ஊராட்சி தலைவர்களாக இருந்த திமுகவினரை வளைக்க அதிமுகவினர் முயற்சித்து வருகின்றனர்.

இதற்காக, வரும் உள்ளாட்சித் தேர்தலில் அவர்கள் போட்டியிட்டால், எளிதில் வெற்றிபெற உதவுவதாகவும் அதிமுகவினர் வாக்குறுதி அளித்து வருகின்றனர் எனக் கூறப்படுகிறது. இதற்கு திமுகவினர் சிலர் ஒப்பு க்கொண்டுள்ளதாகவும், வளைந்து கொடுக்காத திமுகவினரை பணத்தை கொடுத்து சரிக்கட்ட அதிமுக முக்கிய நிர்வா கிகள் முயற்சிப்பதாகவும் கூறப் படுகிறது.

தேர்தல் இறுதிக்கட்டத்தை அடைந் துள்ளதால் திருப்பரங்குன்றத்தில் திமுக, அதிமுவினர் நீயா, நானா? போட்டியில் இறங்கியுள்ளதால் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in