கோப்புப்படம்
கோப்புப்படம்

தீபாவளி | பள்ளி, கல்லூரிகளுக்கு 25-ம் தேதியும் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

Published on

சென்னை: வரும் 25-ம் தேதியும் (செவ்வாய்க்கிழமை) தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளி திருநாளை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை நாளை (அக்டோபர் 24) கொண்டாடப்படும் நிலையில் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏதுவாக அக்டோபர் 25 (செவ்வாய்க்கிழமை) அன்று ஒரு நாள் மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 19-ம் தேதி அன்று பணி நாளாக அனுசரிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in