

மதுரை: மதுரை ரேஷன் கடைகளில் வெளி யூர் ரேஷன் கார்டுகளுக்குப் பொருட்கள் வழங்கும் வசதி திடீரென நீக்கப்பட்டதால் தீபாவளி பொருட்கள் வாங்க வந்த பொது மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்தியாவில் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’ திட்டம் அமலில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டு தாரர்கள் அவர்கள் வசிக்கும் இடத்தின் அருகே உள்ள ரேஷன் கடைகளில் சீனி, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்.
இந்த வசதியை பயன்படுத்தி வெளியூர் மக்கள் ரேஷன் கார்டை மாற்றாமலேயே வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி வருகின்றனர். மதுரையில் பல்வேறு ரேஷன் கடைகளில் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தில் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
சில ரேஷன் கடைகளில் வெளி யூர் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்குவதில்லை. ரேஷன் கார்டு களை எங்கள் கடைக்கு மாற்றிக் கொண்டு வந்தால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என விற்பனையாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக சர்க்கரை, பருப்பு, பாமாயில் தேவைக்காக வெளியூர் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள ரேஷன் கடை களுக்கு சென்றனர். ஆனால் அவர்களுக்கு பொருட்கள் வழங்கப் படவில்லை.
இது குறித்து விற்பனையாளர் களிடம் கேட்டதற்கு, வெளியூர் ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் பெறும் வசதி கைரேகைப் பதிவு செய்யும் இயந்திரத்தில் இருந்து திடீரென எடுக்கப்பட்டுள்ளது என்றனர். இதனால் ரேஷன் பொருட்கள் வாங்க வந்த வெளியூர் கார்டு தாரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இது குறித்து ரேஷன் கடை விற்பனையாளர் ஒருவர் கூறிய தாவது: வெளியூர் கார்டுகளுக்குப் பொருட்கள் வழங்கி வந்தோம். கார்டுதாரர்களுக்குப் பணம், சிறப்புத் தொகுப்புகள் வழங்கும் போது மட்டும் அந்தந்த கடை களில் பொருட்கள் வாங்க வலி யுறுத்தப்படும்.
கைரேகைப் பதிவு இயந்திரத்தில் வெளியூர் கார்டுகளுக்கு பொருட் கள் வழங்கும் வசதி நேற்று திடீரென அகற்றப்பட்டது. இத னால் வெளியூர் கார்டுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க முடிய வில்லை என்றார். வெளியூர் கார்டுதாரர்கள் கூறு கையில், மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் வெளியூர் நபர்கள் எந்த ரேஷன் கடையிலும் ரேஷன் பொருட்களை வாங்கும் வசதியை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.