விரலில் வைக்கும் மை வராததால் வங்கிகளில் பணப் பரிமாற்றங்கள் நிறுத்தம்: ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற பொதுமக்கள்

விரலில் வைக்கும் மை வராததால் வங்கிகளில் பணப் பரிமாற்றங்கள் நிறுத்தம்: ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற பொதுமக்கள்
Updated on
1 min read

வங்கிகளுக்கு மை வராததால், சென்னையில் பல வங்கிகளில் நேற்று பண பரிமாற்றம் நிறுத்தப் பட்டது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற னர்.

1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த 8-ம் தேதி அறிவித்தது. இதைத் தொடர்ந்து பொதுமக்கள் அந்த நோட்டுகளை வங்கிகளிலும், அஞ்சலகங்களிலும் மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஒருவரே அடுத்தடுத்து ரூபாய் நோட்டுகளை மாற்றுவதை தடுக்கும் வகையில், வங்கிகளில் பண பரிமாற்றம் செய்பவர்களின் விரலில் அழியா மை வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலை யில் கடந்த இரு நாட்களாக வங்கிகளுக்கு மை அனுப்பி வைக்கப்படாததால், பல வங்கிகள் நேற்று பணப் பரிமாற்றத்தை நிறுத்தியது. ஒருசில வங்கிகள் மட்டுமே மையை வைத்து பண பரிமாற்றம் செய்தன.

இதுதொடர்பாக டவுட்டன் பகுதியைச் சேர்ந்த இளவசரன் என்பவர் கூறும்போது, “இப்பகுதியில் இயங்கி வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள அதிகாரிகள், ‘வங்கிக் கணக்கில் போட்டு, பணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மை வரும் வரை, பணப் பரிமாற் றம் நிறுத்தப்படும்’ என்று தெரி விக்கின்றனர். இதனால் எங்கள் பணத்தை மாற்ற முடியாமல் திரும்பிச் செல்கிறோம். பிற வங்கி வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதை தவிர்க்கும் விதமாகவே இவ்வாறு செய்கின்றனர்” என்றார்.

சென்னையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி மூலமாக நேரடியாக இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகி, அழியாத மை வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் மையை வழங்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை யில் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை வங்கி அதிகாரி களுடனான ஆலோசனை கூட்டம் ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது ‘மை வருவதற்கு தாமதமாகும். அதுவரை பணம் கொடுப்பதை நிறுத்த வேண்டாம்’ என்று வங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கொடுங்கையூர் பாரத ஸ்டேட் வங்கியில் மக்கள் கூட்டம் நேற்று குறைவாக இருந்தது. இதுபற்றி அந்த வங்கியின் அதிகாரிகளிடம் கேட்டபோது, “தினமும் 650 பேருக்கு பணம் வழங்கி வருகிறோம். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக காலையிலேயே டோக்கன் கொடுத்து, குறிப்பிட்ட நேரத்தில் வருமாறு அறிவுறுத்திவிடுகிறோம்” என்றனர்.

மகாகவி பாரதியார் நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளை யில் வரிசையில் நிற்கும் பொது மக்களின் வசதிக்காக சாமியானா பந்தல் போடப்பட்டுள்ளது. சென்னை முழுவதிலும் உள்ள அனைத்து வங்கிக் கிளைகளிலும் நேற்று மக்கள் கூட்டம் இருந்தது. பல வங்கிகளின் ஏடிஎம்கள் மூடப் பட்டிருந்தன. ஒருசில ஏடிஎம்கள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன. அவற்றின் முன்பு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பணம் எடுத்துச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in