

காவிரி ஆற்றுப் படுகையில் ஷேல் காஸ் எடுக்கும் திட்டம் தொடர்பாக பெட்ரோலியத் துறை பதில் அளிக்க அவ காசம் வழங்கி தேசிய பசுமை தீர்ப்பாயம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
நிரந்தர தடை விதிக்க..
காவிரி ஆற்றுப் படுகையில் ஓஎன்ஜிசி மேற்கொண்டு வரும் ஷேல் காஸ் எடுக்கும் திட்டத்தின் ஆரம்பக் கட்ட பணிகளுக்கு நிரந்தர தடை விதிக்க வேண் டும். ஓஎன்ஜிசி பல ஆண்டு களாக மேற்கொண்டு வரும் பணிகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரி, திரு வாரூர், நாகப்பட்டினம் மாவட்ட காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், காவிரி பாசன குத்தகை விவசாயிகள் சங்கத் தலைவர் ஆர்.முருகன் ஆகியோர் சார் பில் தேசிய பசுமை தீர்ப்பாயத் தின் தென்னிந்திய அமர்வில் தனித்தனியே மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதை விசாரித்த அமர்வு, ஷேல் காஸ் திட்டம் குறித்து தமி ழக அரசு மற்றும் மத்திய பெட் ரோலியத்துறை அமைச்சகம் தனது நிலைப்பாட்டை தெரி விக்க வேண்டும் என்று ஏற் கெனவே உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதி மணி, தொழில்நுட்ப உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன் னிலையில் நேற்று விசா ரணைக்கு வந்தது.
மனுதாரர் பி.ஆர்.பாண்டி யன் தரப்பில் வழக்கறிஞர்கள் சிவ.ராஜசேகரன், வி.ஜெ.அருள்ராஜ், மற்றொரு மனுதாரர் ஆர்.முருகன் தரப்பில் மதிமுக பொதுச்செயலர் வைகோ ஆகியோர் ஆஜராயினர்.
அப்போது மத்திய பெட் ரோலியத்துறை அமைச்சகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பதில் அளிக்க அவகாசம் கோரி னார். அதனைத் தொடர்ந்து, பதில் அளிக்க அவகாசம் வழங் கிய அமர்வின் உறுப்பினர்கள், மனு மீதான விசாரணையை டிசம் பர் 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
பின்னர் வைகோ செய்தி யாளர்களிடம் கூறும்போது, ‘‘காவிரி ஆற்றுப் படுகையில், மக்கள் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு ஷேல் காஸ் திட்டத்தை செயல்படுத்துமானால், அதற்கு எதிரான போராட்டம் மறு வடிவம் எடுக்கும்’’ என்றார்.