

விவசாயிகளின் தற்கொலை யைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.
ஈரோட்டில் நேற்று நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங் கேற்றபின் அவர் கூறியதாவது: தமிழகத்தில் 80 சதவீதம் பருவ மழை பொய்த்துள்ளதால், பாச னத்துக்கு நீர் இன்றி விவசாயி கள் தற்கொலை செய்து கொள் வது அதிகரித்து வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலவச அரிசி, அம்மா உணவகம் போன்ற திட்டங்கள் உரியவர்களுக்கு சென்றடைகிறதா என அரசு கண்டறிய வேண்டும்.
இலங்கை - தமிழக மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்ந்து சிக்கலாகி வருகிறது. இரு தரப்பு மீனவர்கள் மற்றும் இரு தரப்பு அரசையும் அழைத்து பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.