

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்கள் இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகள் மூலம் தமிழக அரசுக்கு ரூ.18 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 15 சதவீதம் அதிகம் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு தீபாவளிப் பண் டிகை கடந்த 29-ம் தேதி கொண் டாடப்பட்டது. தீபாவளி நெரிசலைத் தவிர்க்கவும் பயணிகள் வசதிக்காக வும் சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. தீபாவளிக்கு முந்தைய 3 நாட் களில் அரசு போக்குவரத்துக் கழகங் கள் சார்பில் சென்னையில் 4 இடங்களில் இருந்து 11,225 சிறப்புப் பேருந்துகளும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 10 ஆயிரம் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன. இந்த 3 நாட்களி லும் மொத்தம் ரூ.85.75 கோடி வசூலாகியுள்ளது. இதில், சிறப்புப் பேருந்துகள் மூலம் மட்டுமே ரூ.18 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக போக்குவரத் துத் துறை உயர் அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
பொதுமக்களிடம் வரவேற்பு
தீபாவளி பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊருக்கு சென்று, திரும்பும் வகையில் தேவையான அளவுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. 4 இடங்களில் இருந்து பேருந்துகள் பிரித்து இயக்கியது பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. போக்குவரத்து நெரிசலையும் கணிசமாக குறைக்க முடிந்தது.
நீண்ட தூரம் சென்ற (300 கி.மீ.க்கு மேல்) பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்தனர். குறிப்பாக, கடந்த 26, 27, 28-ம் தேதிகளில் சென்னையில் இருந்து சுமார் 5.5 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். இந்த 3 நாட்களில் அரசுப் போக்குவரத்து கழகங்கள் மூலம் மொத்தம் ரூ.85.75 கோடி வசூலாகியுள்ளது. இதில், சிறப் புப் பேருந்துகளால் மட்டுமே ரூ.18 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது கடந்த ஆண்டைவிட 15 சதவீதம் அதிகமாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.