விதிமீறல் அபராதம்: அரசு நடவடிக்கைக்கு பாஜக வரவேற்பு

விதிமீறல் அபராதம்: அரசு நடவடிக்கைக்கு பாஜக வரவேற்பு
Updated on
1 min read

சென்னை: போக்குவரத்து விதிமீறல்களுக்கு அதிக அபராதம் விதித்துள்ளது தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கையை பாஜக வரவேற்றுள்ளது.

இதுதொடர்பாக தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கை: போக்குவரத்து விதிமீறல்களுக்கு அதிக அபராதம் விதித்துபுதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. 2019-ல் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட மோட்டார் வாகனச் சட்ட திருத்தத்தின் அடிப்படையில் மத்திய அரசின்பரிந்துரைப்படி, இந்த புதிய மாற்றங்கள் கொண்டு வந்திருப்பது சிறப்பு.

இந்த மாற்றங்களை முறையாக அமல்படுத்துவதில் தமிழக காவல் துறை முனைப்புடன் செயல்பட வேண்டும். வாகனஓட்டிகளிடம் அதிகாரிகள் லஞ்சம்பெறாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். சில அமைப்புகள், அரசியல் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், அதை புறந்தள்ளி, மக்கள் நலன் கருதி உறுதியான, வெளிப்படையாக இதை அமல்படுத்த வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in