

டாஸ்மாக் கடைகளில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் ஏற்கப்படாத தால் சில்லறை கிடைக்காமல் ‘குடி மகன்’கள், டாஸ்மாக் ஊழியர் களோடு வாக்குவாதத்தில் ஈடுபட் டனர். இதனால்பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடை களை திறக்கும் நேரமான மதியம் 12 மணிக்கு வழக்கமாக கூட்டம் குறைவாகவே இருக்கும். ஆனால், நேற்றைய தினம் கூட்டம் அதிக மாக இருந்தது. தினசரி குடிப்பவர் கள் மட்டுமன்றி அவ்வப்போது குடிப்பவர்களும் சில்லறை மாற்றும் பொருட்டு தங்களிடம் உள்ள 500 மற்றும் 1,000 நோட்டுகளைக் கொடுத்து மதுபானங்களை கேட்டனர்..
ஆனால், டாஸ்மாக் ஊழியர்கள் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டு களை ஏற்கவில்லை. இதனால், ஊழியர்களுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பல டாஸ்மாக் கடைகளில் 500 மற்றும் 1,000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்கப்படாது என்று அறி விப்பு பலகைகள் வைக்கப் பட்டிருந்தன.
மதுரை, கடலூர், திருச்சி ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகளில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் ஏற்கப்படாததால், விற்பனை வெகுவாக குறைந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிகாரர்கள் பிரச்சினை செய்யக் கூடும் என்பதால் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காவல் நிலையங்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன.
இது தொடர்பாக தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத் தின் தலைவர் நா.பெரியசாமி கூறும்போது, “மதுபானம் விற்ற தொகையை நூறு ரூபாய் நோட்டுகளாகவே தர வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இதனால், பணியாளர்கள் மிகப்பெரிய அளவில் பிரச்சினைகளை சந்தித்தனர். 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று சொன்னபோது மதுபானம் வாங்க வந்தவர்கள் பிரச்சினை செய்தனர். அரசு நிறுவனமான டாஸ்மாக், 500, 1000 நோட்டுகளை ஏற்றிருக்க வேண்டும். நாகை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஊர்களில் டாஸ்மாக் ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்பு கோருகிற அள வுக்கு நிலைமை மோசமானது’ என்றார்.
இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் கிர்லோஷ்குமா ரிடம் கேட்ட போது, ‘500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் அறிவித்துவிட்டார். இது ஒரு சட்டப்பூர்வ அறிவிப்பு என்பதால், டாஸ்மாக் மது விற்பனை யகங்களில் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை வாங்கக் கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம். மேலும், மண்டல, மாவட்ட அதிகாரிகள் தொலைபேசி மூலமும் ஊழியர்களை தொடர்பு கொண்டு 500, 1000 நோட்டுக்களை வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தி யுள்ளனர்’ என்றார்.