Published : 18 Nov 2016 08:16 AM
Last Updated : 18 Nov 2016 08:16 AM

மோடியின் அடுத்த அஸ்திரம்: பினாமி சொத்து ஒழிப்பு

அமலுக்கு வந்தது பினாமி பரிவர்த்தனைகள் தடை திருத்த சட்டம்

கறுப்புப் பண களையெடுப்பின் அடுத்த நடவடிக்கையாக ‘பினாமி சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என முழங்கி இருக் கிறார் பிரதமர் மோடி. இந்த அதிரடி அறிவிப்பால் பினாமி சொத்துக் களைக் கையாளும் பதுக்கல்காரர் களும் அவர்களின் பினாமிகளாக இருப்பவர்களும் உறக்கத்தைத் தொலைத்துவிட்டு நிற்கிறார்கள்.

அரசுக்கு செலுத்த வேண்டிய வரி வருவாயைச் செலுத்தாமல் ஏய்க்க நினைப்பவர்கள் உருவாக் கியதுதான் பினாமி முறை. ஆங்கி லேயர் ஆட்சி காலத்திலேயே பினாமி முறை இருந்தது. இதை ஒழுங்குபடுத்துவதற்கான நட வடிக்கைகளை முன்னெடுத்த ஆங் கிலேய அரசு, 1882-ல் இந்திய அறக்கட்டளை சட்டத்தை கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தின் 81 மற்றும் 82 பிரிவுகள் பினாமி பரி வர்த்தனைகளைக் காப்பாற்றவும் அவற்றுக்கு அங்கீகாரம் அளிப்பது மாக இருந்ததால் அதைப் பயன் படுத்தி பினாமி பரிவர்த்தனைகள் வேகமெடுத்தன.

இந்த நிலையில், பினாமிகளுக்கு கிடுக்கிப்பிடி போடுவதற்காக 1976-ல் வருமான வரிச் சட்டம் 1961-ல் பிரிவு 281-ஏ பாராளுமன்றத் தில் அறிமுகமானது. பினாமி ஒழிப்பு குறித்து இந்தச் சட்டத்தில் சில ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டாலும் அதன் முழு பயனை எட்டமுடிய வில்லை. இதையடுத்து. 1988-ல் இந்திய சட்ட ஆணையம் பினாமி ஒழிப்பு குறித்து குடியரசு தலை வருக்கு தனது சிபாரிசுகளை அளித்தது. அதைத் தொடர்ந்து அந்த ஆண்டே பினாமி பரிவர்த் தனைகள் தடை சட்டம் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தில் 9 பிரிவுகள் இருந்தன.

பினாமி பெயரில் பரிவர்த்தனை கள் நடப்பது உறுதி செய்யப்பட் டால் மூன்று வருட தண்டனையுடன் கூடிய அபராதம் என்று பிரகடனம் செய்த இச்சட்டம் பினாமி சொத்துக் களைப் பறிமுதல் செய்வதையும் வலியுறுத்தியது. எனினும் இந்தச் சட்டத்தை செம்மையாக செயல்படுத்துவது குறித்து போதிய வழிகாட்டல்களும் விளக்கங்களும் இல்லாததால் இச்சட்டம் இதுவரை ஏட்டள விலேயே உள்ளது.

500, 1000 ரூபாய் நோட்டுகளில் பெரும்பகுதி கறுப்புப் பணமாக உலவுவதாக அறியப்பட்டதாலேயே இந்த ரூபாய் நோட்டுகளுக்கு காலாவதி தேதி குறித்திருக்கிறது மத்திய அரசு. இந்தப் பதுக்கல் பணத்தில் கணிசமான பகுதியானது பினாமி சொத்துக்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இதனாலேயே பினாமி சொத்துக்கள் மீதும் கவனத்தைத் திருப்பி இருக்கிறார் மோடி. பினாமி பரிவர்த்தனைகள் தடை சட்டத்தில் முக்கியமான திருத் தங்களை மேற்கொண்டு அதை நவம்பர் முதல் தேதியிலிருந்து அமலுக்கும் கொண்டு வந்துவிட்டது அரசு.

புதிய சட்டத் திருத்தம்

ஏற்கெனவே 9 செக்‌ஷன்களாக இருந்த பினாமி பரிவர்த்தனைகள் தடை சட்டம் தற்போது 72 செக்‌ஷன் களாக விசாலப்படுத்தப்பட்டுள்ளது. பினாமி சொத்துக்கள் குறித்து விசா ரணை நடத்த தீர்ப்பு ஆணையம் அமைத்தல், விசாரணை நடத்துதல், பினாமி சொத்துக்களை வைத்திருப் பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தல், அத்தகைய சொத்துக்களைக் கையகப்படுத்துதல் என ஒவ்வொரு அம்சமும் சட்டத் திருத்தத்தில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

சட்ட திருத்தத்தின் சிறப்பு அம்சங்கள்

பினாமி சொத்துக்கள் குறித்து விசாரிப்பதற்காக தலைநகரில் தீர்ப்பு ஆணையம் அமைக்கப்படும். தேவைப்படும் பட்சத்தில் நாட்டின் எந்த இடத்திலும் இந்த ஆணை யத்தின் அமர்வு ஏற்படுத்திக் கொள்ளப்படும். இந்த ஆணை யத்தின் தலைவராக வருமான வரி துறையில் ஆணையர் அந்தஸ்தில் இருப்பவர் அல்லது சட்டத்துறையில் மூத்த இணைச் செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் நியமிக்கப்படுவார். அவர் தனக்குக் கீழே இரண்டு உறுப்பினர்களை நியமிப்பார். இவர்களும் அரசு அதிகாரிகளே. அவர்கள் 5 ஆண்டுகள் அல்லது 62 வயது எது முதலில் வருகிறதோ அதுவரை பதவியில் இருக்கலாம்.

பினாமி சொத்துக்கள் குறித்து ஆணையத்தின் தொடக்க நிலை அதிகாரிகள் சேகரிக்கும் தகவல் களை அடுத்த நிலையில் உள்ள அங்கீகாரம் வழங்கும் அதிகாரி சரிபார்த்து அந்தச் சொத்துக்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க ஒப்புதல் வழங்குவார். அதன்பிறகு, நிர்வாக அதிகாரி மூலம், பினாமி சொத்துக்குரிய நபர்களுக்கு சம்மன் அனுப்பப்படும். சம்பந்தப்பட்ட நபர்கள் ஆணைய தலைவர் முன்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.

ஆணையமும் அதிகார வரம்பும்

ஆணையம் உரிமையியல் நடைமுறைச் சட்டத்துக்கு கட்டுப் பட்டது அல்ல. அதேசமயம், உரி மையியல் நீதிமன்றத்துக்கான அனைத்து அதிகாரங்களும் ஆணை யத்துக்கு உண்டு. யாரையும் விசாரணைக்கு அழைக்கவோ, விசாரணை நடத்துதல் மற்றும் நடவடிக்கை எடுத்தலுக்காக மத்திய - மாநில அரசு அதிகாரிகளை நியமிக்கவோ கமிஷன் அமைக் கவோ ஆணையத்துக்கு திருத்தச் சட்டம் அதிகாரம் அளிக்கிறது.

ஆணையம் தனது பினாமி ஒழிப்பு நடவடிக்கைக்காக வருமான வரித்துறை, சுங்கம் மற்றும் கலால் துறை அதிகாரிகள் போதைப் பொருள் தடுப்புச் சட்டப்படி பணியமர்த்தப்பட்ட அலுவலர்கள், ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், ரிசர்வ் வங்கி அதிகாரிகள், அந்நியச் செலா வணி அமலாக்கத் துறையினர் உள் ளிட்டவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவர்களைத் தவிர உள்ளாட்சி பிரதிநிதிகள், வங்கி அதிகாரிகள் உள்ளிட்டவர்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பினாமிகளுக்கு என்ன தண்டனை

குறிப்பிட்ட ஒரு சொத்து பினாமி சொத்தாக கருதப்பட்டு அதன் உரிமையாளருக்கு சம்மன் அனுப்பப்பட்டுவிட்டால் விசாரணை முடியும்வரை அந்தச் சொத்தை விற்க முடியாது. ஒரு சொத்து பினாமி சொத்து என விசாரணையில் உறுதிசெய்யப்பட்டால் அதன் உண் மையான உரிமையாளருக்கு ஒன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். சம்பந்தப்பட்ட சொத்து பறிமுதல் செய்யப்படுவதுடன் அந்த சொத்தின் சந்தை மதிப்பில் 25 சதவீதத்தை அபராதமாக செலுத்த வேண்டும்.

சொத்துக்களின் அசல் உரிமை யாளர்கள் மட்டுமின்றி அவர் களுக்காக பினாமிகளாக்கப்பட்ட வர்களுக்கும் தண்டனை உண்டு. இது என்னுடைய சொத்துத்தான் என இரவல் மனிதர் வாதாடி னால் அதற்கான வருமானம் வந்த வழிகளை அவர் நிரூபிக்க வேண்டும். ஒரு சொத்து பினாமி சொத்து என ஆணையம் தீர்ப் பளித்தாலும் 45 நாட்களுக்குள் மேல்முறையீட்டு அதிகாரிக்கு மேல் முறையீடு செய்யலாம். அங்கேயும் அதே தீர்ப்பு உறுதியானால் உயர் நீதிமன்றத்தையும் அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தையும் நாடலாம்.

பினாமி பரிவர்த்தனைகள் திருத்த சட்டம் குறித்து ‘தி இந்து’ விடம் சென்னை உயர் நீதிமன்றத் தின் மூத்த வழக்கறிஞர் கே.அழகு ராமன் கூறியதாவது:

முந்தைய சட்டத்தைவிட திருத்த சட்டத்தில் பினாமி ஒழிப்பு நடவடிக்கைக்கு விரிவான சட்ட வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன. இந்தச் சட்டத்தை முறையாக பயன் படுத்தினால் கறுப்புப் பண முதலீடு களைப் பெருமளவு தடுக்க முடியும். என்றாலும், பினாமி சொத்துக்களை அடையாளம் காண்பதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

எத்தகைய அளவுகோல் வைத்து பினாமி சொத்துக்களை அடையாளப் படுத்தப் போகிறார்கள் என்று தெரிய வில்லை. சம்மன் அனுப்பப்பட்ட பினாமி சொத்துக்களை விற்றால் செல்லாது என்று சொல்கிறது இந்த புதிய சட்டம். இதற்குப் பதிலாக, பினாமியாக அடையாளப்படுத்தப்பட்ட சொத்து குறித்து சம்பந்தப்பட்ட சார்பதி வாளர் அலுவலகத்தில் வில்லங்க பதிவு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இப்படிச் செய்யாவிட்டால் பினாமி சொத்துக்களை, அப்பாவிகளுக்கு விற்று ஏமாற்றி விடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் அறிவித்த பினாமி ஒழிப்பு முழக்கம் முழுவீச்சில் அமலுக்கு வரும்போது இந்திய பொருளா தாரத்தில் இன்னும் கூடுதலான அதிர்வலைகளை நிச்சயம் எதிர் பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x